மாதவன், அஜய் தேவ்கன், ஜோதிகா நடித்து கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியான ஷைத்தான் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


ஷைத்தான்


தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகா வலம் வந்த ஆர் மாதவன் முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் ஷைத்தான். விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா, ஜான்வி, அங்கத் ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ஷைத்தான். ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கடந்த 2023ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான வஷ் என்கிற படத்தின் இந்தி ரீமேக்காக இந்தப் படம் வெளியானது.


ஷைத்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ட்ரெய்லர் வெளியானபோது படம் கண்டிப்பா தியேட்டர் விட்டு ஓட வைக்கப் போகிறது என்னும் அளவிற்கு மிரட்டலாக இருந்தது. ஆனால் படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களே வெளியாகின.


குறிப்பாக மாதவன் நடித்த யாவரும் நலம் மாதிரியான ஹாரர் படம் ரசிகர்களை மிரள வைத்திருந்த நிலையில் இந்தப் படத்தில் அப்படியான ஒரு கதையை எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும் .  ஷைத்தான் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அதன் முதல் இரண்டு நாள் வசூலும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறைந்துள்ளது.  இருந்தும் முதல் ஐந்து நாளில் இந்த வசூல் என்பது படம் வெற்றிபெற்றுள்ளதை காட்டுகிறது.


ஷைத்தான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 






ஷைத்தான் படம் முதல் நாளில் ரூ.14.75 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் ரூ. 18.75 கோடிகளையும் மூன்றாவது நாளில் ரூ.20.05 கோடிகளையும் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து நான்காவது நாளில் வசூல் பாதிக்கும் கீழாக குறைந்து ரூ.7.25 கோடிகளையும், ஐந்தாவது நாளாக ரூ.6.5 கோடிகளையும் வசூலித்துள்ளது.


மொத்தம் ஐந்து நாட்களில் ஷைத்தான் படம் ரூ.69.51 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.




மேலும் படிக்க : TVK Vijay - Arjun Sampath: “ஜோசப் விஜய்க்கு அரசியல் அடிப்படை அறிவுகூட இல்லை; ஒரு கோடி தரேன்” - அர்ஜூன் சம்பத் ஆஃபர்!


Premalu Trailer: ரூ.100 கோடி வசூலித்த கையுடன் தமிழில் வெளியாகும் பிரேமலு: ட்ரெய்லர் வெளியீடு!