பொண்டாட்டி இருக்கும் போதே இயக்குனரின் முன்னாள் மனைவி மீது தீரா காதலில் மதம்பட்டி ரங்கராஜ்! காட்டிக்கொடுத்த போட்டோஸ்!

சமீப காலமாக பல பிரபலங்கள் வீட்டு திருமண விழாக்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்களுக்கு சமையல் கலைஞராக மாறி உள்ள மதம்பட்டி ரங்கராஜ் பற்றி வெளியாகி உள்ள தகவல், தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி உள்ளது.

Continues below advertisement

மதம்பட்டி ரங்கராஜ் பல வருடங்களாக சமையல் கலைஞராக இருந்தாலும், சினிமாவுக்கு வந்த பிறகே அவருடைய சமையல் திறமை மற்றும் கேட்டரிங் பற்றி அதிகம் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. மேலும் தற்போது செலிபிரிட்டிஸ் மற்றும் அரசியல்வாதிகள் வீட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும்  ரங்கராஜின் சமையலை தான் விரும்புகிறார்கள் எனவே தற்போது நடிப்பை விட தன்னுடைய கேட்டரிங் பிசினஸில் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளார் ரங்கராஜ்.

Continues below advertisement

இது மட்டுமின்றி இவருக்கு அமெரிக்காவிலும் சொந்தமாக ஹோட்டல் ஒன்று உள்ளது. இதன் மூலம் தன்னுடைய ஹோட்டலுக்கு வரும், அமெரிக்க மக்களுக்கு பாரம்பரிய சுவையில் உணவுகளை கொடுத்து வருகிறார். எந்த ஒரு சமையல் ஆர்டர் என்றாலும் அதனை எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து முடிப்பதே இவருடைய சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இவர் கேட்டரிங்கில் செய்யப்படும் சமையல்கள் அதிக எண்ணெய் இல்லாமலும், காரம் இல்லாமலும், மசாலா பொருட்கள் திகட்டாத அளவிலும் இருக்கும். அதே போல் சில பாரம்பரிய உணவுகளை அந்தந்த ஊரு சமையல் கலைஞர்களை வைத்து தான் செய்கிறார். இதற்காக பெரிய தொகையையும் செலவிடுகிறார்.


வசதியானவர்களுக்கு ஏற்ற ஒரு கேட்டரிங் சர்வீஸாகவே இவருடையது பார்க்கப்படுவதால், யோகி பாபு முதல் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி வீட்டு வேஷம் வரை இவருடைய சமையல் தான் களைகட்டியது. ஒருபுறம் பிசினஸில் கலக்கி கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் திரைப்படங்களிலும் அவ்வப்போது கவனம் செலுத்தி வருகிறார். இவர் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இது தவிர குக் வித் கோமாளி அடுத்த சீசனிலும், இவர் தான் நடுவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவர் தன்னுடைய ஸ்டைலிஸ்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்சல்டா உடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜாய் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் உள்ளது.


ஜாய், டார்லிங் உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். அதே போல் கீர்த்தி சுரேஷ், சிருஷ்டி டாங்கே, போன்ற பல நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் ஜோதிகாவை வைத்து, 'பொன்மகள்' வந்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஜேஜே பெட்ரிக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது குழந்தையோடு தனிமையில் வசித்து வந்த ஜாய் மீது தான் தீராக்காதலில் உள்ளாராம் ரங்கராஜ்.

ஜாய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜாய் ரங்கராஜ் என்று குறிப்பிட்டுள்ளதோடு, R என்கிற இனிஷியல் அணிந்த டாலரை கழுத்தில் அணிந்துள்ளார். அதே போல் ரங்கராஜ் காதலர் தினத்தில் தன்னோடு இருந்ததாகவும், அவர் சூரிய காந்தி மலரை பரிசளித்ததாகவும் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். மேலும் ரங்கராஜியுடன் எடுத்து கொண்ட பல புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் ரங்கராஜ், ஜாய்யை திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவியோடு ரங்கராஜ் நெருக்கமாக இருப்பது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய குடும்பம் இதை எப்படி தாங்கும்? என்பது போல் சிலர் ரங்கராஜை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஜாய் வெளியிட்ட போட்டோஸ் பலவற்றில் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருப்பதையும் பார்க்கமுடிகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola