மாரி சீரியலில் சூர்யாவுக்கு 2வது திருமணம் செய்து வைக்க தாரா சம்மதம் கேட்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில்ஹாசினிடம் சூர்யா மாரியை தான் மனைவியாக முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை.
மத்தபடி மாரியை எனக்கு பிடிக்கும் என்று சொல்ல அதை மாரி கேட்டு விட்டு தேவி போட்டோ முன்பு வேண்டுகிறாள். அப்போது ஜெகதீஸ் அந்த பக்கம் வந்து மாரியிடம் நீ தயவு செய்து திருமணத்திற்கு ஒத்துக்காதே. நீ ஒத்துக்கொண்டால் கண்டிப்பா தாரா சூர்யாவுக்கு இன்னொரு திருமணம் செய்வாள் என்று சொல்லிவிட்டு போகிறார்.
இதனையடுத்து மறுநாள் காலை டைனிங் டேபிளில் தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவிடம் தாரா கல்யாணத்துக்கு சம்மதமா என்று கேட்க சூர்யா வேண்டாம் என்று சொல்ல அவரோ நெஞ்சுவலி ஏற்படுகிறது. தூக்கத்திலிருந்து சூர்யா எழுந்த நிலையில் அதை மாரி பார்த்து நீங்கள் அத்தை சொல்வது போன்று இரண்டாம் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல சூர்யா ஷாக்காகிறான்.
அப்படி செய்வது உனக்கு நான் செய்ற துரோகம் இல்லையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் உங்களை காப்பாத்த வந்து இருக்கேன். இந்த வீட்ல ஓரமா நான் வேலைக்காரியா இருந்திருக்கேன். தாராளமா நீங்க கல்யாணத்துக்கு ஒத்துங்க என்று சொன்னவுடனே மாரி மற்றும் சூர்யா என இருவரும் ஃபீல் பண்ணுகின்றனர்.
மறுநாள் காலை தாரா சூர்யாவிடம் கல்யாணத்துக்கு சம்மதமா என்று கேட்க சூர்யா அமைதியா இருக்கிறார். அனைவரும் உன்னால் தான் மாரி சூர்யா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லமாட்டேங்குறான் என சொல்கிறார்கள். ஆனால் தனக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கிறது. நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன் தாராளமாக நீங்க சூர்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்யுங்கள் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.