சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு வெளியாவதால் மாநாடு படம் ரிலீஸ் தள்ளிப்போகிறது.

Continues below advertisement

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

திரையலகிற்கும். திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்..

Continues below advertisement

நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே  சில வருடன் உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் "மாநாடு". முழவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல, ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப்பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம். போட்டி என்ற ரீதியில்  பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை.அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

 

தமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்துபார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால், என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படகூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்?

ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியெறுகிறது

வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள் பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண