மாமன்னன் படத்துக்கு நடிகர் வடிவேலு டப்பிங் கொடுக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.


பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மாமன்னன்".


உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், பஹத் பாஃசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மாரி செல்வராஜ் உடன் முதன்முறையாக இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், செல்வா படத்தொகுப்பும், ஆர்.கே எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளனர்ர். 


தன் முந்தைய படங்களைப்போல் இந்தப் படத்தையும் அரசியல் பேசும் படமாக மாரி செல்வராஜ் எடுத்துள்ளார். அதன்படி நடிகர் வடிவேலும் இந்தப் படத்தில் எம்.எல்.ஏவாகவும், உதயநிதி ஸ்டாலின் அவரது மகனாகவும் நடித்துள்ளனர்.


மிஷ்கின் இந்தப் படத்தில் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மாமன்னன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதமே நிறைவடைந்ததாகத் தகவல் வெளியான நிலையில், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ரிலீசாக படம் வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியானது.


தொடர்ந்து தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடிகர் வடிவேலு மாமன்னன் படத்துக்காக இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து அமர்ந்து டப்பிங் மேற்கொள்ளும் புகைப்படங்களை முன்னதாக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


படம் குறித்த வேறு எந்த அப்டேட்டுகளும் தற்போதைக்கு வெளியாகாத நிலையில் வடிவேலுவின் இந்த டப்பிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.






மேலும் முன்னதாக வடிவேலு நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்து தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது மாமன்னன் படத்தை பெரிதும் எதிர்பார்த்து வடிவேலு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்


இதேபோல் சென்ற ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கையில் அவர் வாள் ஏந்தியபடி இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. உதயநிதியையும், மாரி செல்வராஜையும் வாழ்த்தி ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மாமன்னன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் ஒருபுறம் நடக்க இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றொருபுறம் தன் அடுத்த படமான ‘வாழை’ படத்தின் முதற்கட்ட பட்டப்பிடிப்பை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Watch Poorna BabyShower: கேரள முறைப்படி வேட்டி கட்டி வளைகாப்பு... நிறைமாத கர்ப்பிணியாக இதயங்களை அள்ளும் பூர்ணா!