பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வருகிறார். இவருக்கு துணையாக நடிகை கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், நீண்ட நாட்களுக்கு வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இந்த படத்தில் மாரி செல்வராஜுடன் இணைந்துள்ளார். மேலும், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், செல்வா படத்தொகுப்பும், ஆர்.கே எடிட்டிங் பணிகளை மேற்கொள்கின்றனர்.
தகவலின்படி, இந்த படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்டு உருவாகி வருவதாகவும், நடிகர் வடிவேலும் இந்தப் படத்தில் எம்.எல்.ஏவாகவும், உதயநிதி ஸ்டாலின் அவரது மகனாகவும் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும், கௌரவ வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், கடந்த 6 மணி நேரத்திற்கு முன்னதாக மாமன்னன் படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிந்திருந்தார். அதன்படி, சரியாக மாலை 6 மணிக்கு மாமன்னன் குறித்த அப்பேட் வெளியானது.
அதில், மாமன்னன் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி வெளியிட்ட போஸ்டரில், எதிரெதிரே உதயநிதி மற்றும் வடிவேல் நிற்பது போலவும், அவர்களின் இரண்டு உருவங்கள் ஒன்றாக சந்தித்து தலை ஒன்றாக இருப்பது போலவும் இருந்தது.
மாமன்னன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே முடிவடைந்ததாக தகவல் வெளியான நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் டப்பிங் வேலைகள் நிறைய இருப்பதால் படம் வெளியாக தாமதம் ஆனதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழலில் மாமன்னன் படம் குறித்த முதல் அப்டேட் வெளியானது உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மாமன்னன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் ஒருபுறம் நடக்க இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றொருபுறம் தன் அடுத்த படமான ‘வாழை’ படத்தின் முதற்கட்ட பட்டப்பிடிப்பை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.