Nenjame Nenjame Song: மாமன்னன் திரைப்படத்தின் ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடலின் ‘ரிப்ரைஸ்’ வெர்ஷன் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. 


படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் - சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்தப் பாடலின் வரிகளை எழுதியுள்ளார். ஒரு பக்கம் இந்தப் பாடலின் வரிகளை ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர் . ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பட பிரபலங்களும் இந்தப் பாடலை பாராட்டி வருகிறார்கள். தற்போது, அதிவீரன் சிறுவயதில் இடம்பெற்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.



பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என பலரும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜூன் 29- ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியான நிலையில், தொடர்ந்து பல்வேறு வகையான வரவேற்பு மற்றும் விமர்சனங்களை பெற்று வருகிறது.  ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் பாடல்களும் கவனமீர்த்து பாராட்டுக்களை அள்ளி வருகின்றன. 


ஒருபுறம் அரசியல் தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் தொடங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் வரை இப்படம் பல தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை அள்ளி வருகிறது. 


மாரி செல்வராஜ் வாழ்த்து


கர்ணன் படத்தில் ‘மஞ்சனத்தி பூரணம் பாடலும், மாமன்னன் படத்தில் ‘நெஞ்சமே..நெஞ்சமே.. சிறப்பான பாடலை பாடியதற்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.