முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான தோனிக்கு உலகம் முழுவது ரசிகர்கள் இருக்கிறார்கள். சாமானிய மக்கள் ஒரு பக்கம் என்றால் இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்கள், பிற அணிகளில் இருக்கும் வீரர்களுக்கு  , திரைப்பட நடிகர்கள், என அவரது விசிறிகள் இல்லாத இடமே இல்லை. அந்த மாதிரியான ஒரு டை ஹார்ட் ஃபேன் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன். எப்படியோ அடம்பிடித்து தோனியின் ஆட்டோகிராஃபை வாங்கிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டிருக்கிறார் விக்கி என்கிற விக்னேஷ் சிவன்.


என்னுடைய ஹீரோ


தனது டீ ஷர்ட்டில் தோனியிடம் கையெழுத்து வாங்கி அவரது கைகளைப் பற்றி முத்தமிடுகிறார் விக்னேஷ் சிவன். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட விக்னேஷ் “ என்னுடைய கேப்டன், என்னுடைய ஹீரோ , என்னுடைய ரோல் மாடல். இந்த தூய்மையான உள்ளத்திற்கு அருகில் இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.  ஒவ்வொரு நாளும் நான் மிக மரியாதையுடன் பார்க்கும் ஒரு மனிதர் மகேந்திர சிங் தோனி. அவரைப் பார்க்கும்போது என் முகத்தில் தோன்றும் சிரிப்பு எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. தனது தயாரிப்பில் முதல் படமாக ஒரு தமிழ் படத்தைத் தேர்வு செய்ததற்கு அவருக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் இந்தப் படத்திற்கான அத்தனை ஆதரவையும் நாங்கள் வழங்குவோம்.” என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.






 


தோனி எண்டர்டெயின்மெண்ட்


தோனி தற்போது புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் தோனி எண்டர்டெயின்மெண்ட். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படம் லெட்ஸ் கெட் மேரீட். ஹரிஷ் கல்யான் இந்தப் படத்தில் கதா நாயகனாக நடித்திருக்கிறார். லவ் டுடே படத்தின் நடித்து பிரபலமான இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜூலை 10-ஆம் தேதி இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.