மாமன்னன் படத்தில் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார் என தகவல் தெரிவித்துள்ளது படக்குழு.ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல் வரிசை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டுப் பாடல்களை நாம் கேட்டுவிட்ட நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்றப் பாடல்களையும் அவற்றை பாடியவர்கள் யார் என்பதையும் பார்க்கலாம்.
கொடி பறக்குற காலம்
இந்தப் பாடல் வரிசையில் முதலில் அமைந்திருக்கும் பாடல் “கொடி பறக்குற காலம்” கல்பனா ராகவேந்தர், ரக்ஷிதா சுரேஷ் தீப்தி சுரேஷ் அபர்ணா ஹரிக்குமார் ஆகியவர்கள் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்கள்.
நெஞ்சமே நெஞ்சமே
இரண்டாவது பாடலான நெஞ்சமே நெஞ்சமே பாடலை விஜய் யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் ஆகியவர்கள் இணைந்து பாடியிருக்கிறார்கள். ரஹ்மான் இடையில் வெகு நாட்களுக்குப்பின் விஜய் யேசுதாஸ் குரலை இந்தப் படத்தில் கேட்கலாம்.
உச்சந்தல
மூன்றாவது பாடலின் பெயர் உச்சந்தல.தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பகவத்துல்லா, பவித்ரா சாரி ஆகியவர்கள் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள்
மன்ன மாமன்னா
நான்காவது பாடலான மன்ன மாமன்னா பாடலை எஞ்சாய் எஞ்சாமி பாடலை பாடியவரான பாடகர் அறிவு பாடியுள்ளார்.
வீரனே
ஐந்தாவது பாடலான வீரனே பாடலை ஏ. ஆர். அமீன் பாடியுள்ளார்.
ராசாகண்ணு
இந்தப் பாடலை வடிவேலு பாடியுள்ளார். ஏற்கனவே இந்தப் பாடலின் வீடியோ சில நாட்கள் முன்பு வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது.
ஜிகு ஜிகு ரயில்
ஏ. ஆர் ரஹ்மான் குரலில் அமைந்த இந்தப் பாடல் ரெகே என்னும் ஆப்பிரிக்க இசை வகைமையைச் சார்ந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் பாடல் வீடியோ பரவலான கவனத்தை ஈர்த்தது.
தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி திரையுலகினர், ரசிகர்களின் கவனம் பெற்ற இயக்குநரானார் மாரி செல்வராஜ். அவரின் அடுத்த படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இன்று இந்தப் படத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் விமரிசையாக நடைபெற இருக்கிறது. மேலும் மாலை 7: 30 மணியளவில் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.