மாரிசெல்வராஜ், உதயநிதி, வடிவேலு கூட்டணியில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வழக்கமாக தனது பாணியில் இசையால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஏ.ஆர். ரஹ்மான், அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.


அதில் கேள்வி கேட்பவருக்கு நச்சென பதிலளித்து பங்கம் செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மாமன்னன் வெற்றி குறித்து பேசிய அவர், 12 வயதில் இருந்து பட்ட கஷ்டத்துக்கு தற்போது பலன் கிடைப்பதாகவும், சில நேரம், இந்த அளவுக்கான புகழ்ச்சிக்கு நான் சரியானவனா என கேள்வி எழும் என்றும் கூறியுள்ளார். 


பைக் ரைடு போக பிடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் பைக்கில் அழைத்து செல்ல வேண்டும் என என் மனைவி ஆசைப்படுவார். அதனால் இரவு 11 மணிக்கு சென்னை அசோக் பில்லர் பகுதியில் பைக்கில் அழைத்து சென்றிருக்கிறேன். தற்போது வயசானதால் பைக் ரைடு போகறது இல்லை” என்றார். 


உங்கள் குடும்பத்தில் யாருக்காவது தக் லைஃப் கொடுத்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், ”அடிக்கடி கிண்டல் பண்றதால தான் என்னோட சின்னப்பெண் என்னை காட்டுமிராண்டின்னு  ஆழைப்பார்” என்றார்.  


தமிழ் மொழி எவ்வளவு பிடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த இசைப்புயல், “என்னோட கனவு, சிந்தனை எல்லாமே தமிழில் தான் இருக்கும். சின்ன வயதில் நான் அதிகமாக பேசியதில்லை. ஆங்கிலத்தில் பேசினாலும் எனது எண்ணங்கள் தமிழில் தான் இருக்கும். தமிழ் மொழியை காதலிக்க வேண்டும் நம்ம முகத்துக்கு அது தான் செட் ஆகும்” என்றார்.


ஏ.ஆர். ரஹ்மான் கோபப்பட்டு இருக்கிறாரா என்ற கேள்விக்கு, “கோபம் வந்தால் மாரி செல்வராஜ் மீது போனை தூக்கி போட்டு உடைக்கமாட்டேன் என தக் லைஃப் கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர்,  டீம் ஒர்க் சரியாக நடக்கவில்லை என்றால் கோபம் வரும். அந்த கோபம் எல்லாருக்குமே பிடிக்கும்” என்றார். 


இசையை தவிர வேறு எதில் நேரம் செலவிடுவீர்கள் என்ற கேள்விக்கு, ”பசங்க கூட சேர்ந்து ஹோம் தியேட்டரில் சினிமா பார்ப்போம். மாஸ்க் போட்டுக்கிட்டு போயிட்டு தியேட்டரில் படம் பார்ப்பேன். அதிகமாக பிவிஆர் தியேட்டருக்கு தான் செல்வேன் “ என்றார். 


வாட்சப் போன்ற குரூப் சேட் செய்யும் பழக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு “நான் வாட்சப்பில் இல்லை” என  தொகுப்பாளருக்கு தக்லைஃப் கொடுத்தார். 


சங்கர் மற்றும் மணி ரத்னம் இவர்களில் யார் கூட வேலை செய்வது கடினம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், உடனே மணிரத்னம் என்றார். 


நடனத்தில் விருப்பம் உள்ளதா என்ற கேள்விக்கு “டான்ஸ்க்கு மாஸ்டரை தேடி கொண்டிருக்கிறேன்” என்றார்.  


நிகழ்ச்சியில் திரையில் காட்டப்பட்ட தனது திருமண புகைப்படத்தை பார்த்த ஏர்.ஆர். ரஹ்மான், “என் அம்மாக்கிட்ட போய்ட்டு நான் ஒரு பெண்ணை பார்த்தேன். எனக்கு மேரேஜ் பண்ணி வைங்கன்னு கேட்டேன். எனக்கு டைம் இல்லை. அதனால் உடனே கேட்டேட்டுட்டேன். அவங்கள திருமணம் பண்ணதால் தான் என்னால் இத்தனை படம் பண்ண முடிந்தது. இல்லை என்றால் மன உளைச்சலில் இருந்து இருப்பேன்” என்றார்.