கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரம் , விவேகம் ,விஸ்வாசம் , அண்ணாத்தே உள்ளிட்ட படங்களுக்கு முன்னதாக ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
கங்குவா படத்தைப் புகழ்ந்த விவேகா
மிகப்பெரிய பொருட்செலவில் சரித்திர படமாக உருவாகியுள்ள கங்குவா சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய படமாக அமையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடம் இருக்கிறது. இந்தி , தெலுங்கு என பிற மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ஈட்டி வரும் நிலையில் தமிழ் சினிமா இதுவரை பாக்ஸ் ஆபிஸில் எந்தவிதமான அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. இப்படியான நிலையில் இந்த் ஆண்டு தமிழில் அதிகம் எதிர்பார்க்கப் படங்களில் ஒன்றாக கங்குவா இருக்கிறது. இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படத்திற்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
கங்குவா படத்திற்கு பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் விவேகா கங்குவா படத்தை பாராட்டியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “ 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம். இந்த மாதிரியான ஒரு படத்தில் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். கங்குவா படத்திற்கு திரைத்துறை சார்பில் கிடைத்திருக்கும் முதல் விமர்சனமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து திரைத்துறையினர் படத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க : Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு