Vairamuthu: கருணாநிதியிடம் வைரமுத்துவை போட்டுக் கொடுத்த அ.தி.மு.க. பிரபலம்! கலைஞர் கொடுத்த ரிப்ளை என்ன?

ராகேஷ் தாரா   |  11 May 2024 03:36 PM (IST)

கலைஞர் கருணாநிதியுடன் தனது அனுபவம் ஒன்றை பாடலாசிரியர் வைரமுத்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

வைரமுத்து , கலைஞர் கருணாநிதி (Image source: Twitter)

வைரமுத்து

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதியுள்ளார். மீடூ விவகாரத்தில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சின்மயி தவிர பல பெண்கள் வைரமுத்து தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டினர். இந்த பிரச்சனையைத் தொடர்ந்து வைரமுத்து மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. 

இளையராஜாவுடன் மோதல்

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்தப் பாடல்களுக்கான முழு உரிமையும் தனக்கே சொந்தமானவை என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதற்கு வைரமுத்து தன் சார்பில் சில பாடல்களில் இசை பெரிது சில பாடல்களில் இசையைக் காட்டிலும் மொழி சிறந்ததாக இருக்கும் . இதை புரிந்துகொண்டவன் ஞானி புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி என்று மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக சாடியிருந்தார்.

கலைஞரிடம் வைரமுத்து பற்றி அவதூறு

இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வைரமுத்து தனக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அவர்

 

Published at: 11 May 2024 03:36 PM (IST)
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.