குட் நைட் திரைப்படத்தின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறியுள்ள நடிகர் மணிகண்டன், குட் நைட் திரைப்படத்திற்குப் பின்னர் குட் நைட் மணிகண்டன் என அழைக்கப்பட்டு வருகின்றார். இவரது குட் நைட் படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் புரோடெக்சன்ஸுடன் இணைந்து ஏம்.ஆர்.பி எண்டெர்டைமெண்ட்டுடன் இணைந்து லவ்வர் படத்தினை தயாரித்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று அதாவது டிசம்பர் 24ஆம் தேதி படக்குழு தரப்பில் வெளியாகியுள்ளது. 


இந்த படத்தின் டீசரில் மணிகண்டனின் கல்லூரிப்பருவ காதல் திருமணம் வரை செல்லும்போது இடையில் ஏற்படும் தவறான புரிதல்களால் ஏற்படும் சிக்கல்களை பேசும் படமாக இருக்கும் என தோன்றுகின்றது.  இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் சமகாலத்தில் உள்ள ஆகச் சிறந்த கலைஞர்களை வரிசைப்படுத்தினால் அதில் நடிகர், இயக்குநர், வசன கர்த்தா, திரைக்கதை ஆசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்ற அவதாரங்களை எடுத்து வலம் வந்து கொண்டு உள்ள இளம் கலைஞர் மணிகண்டனுக்கு எப்போதும் இடம் உண்டு.


மணிகண்டன் ஒரு படத்தில் நடிக்க அல்லது பணிபுரிய ஒத்துக் கொள்கின்றார் என்றால் அந்தப் படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இருக்கும். இவரது இயக்கத்தில் வெளியான நரை எழுதும் சுயசரிதம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவசங்கரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். 


மணிகண்டன் ஒரு படத்தில் இருக்கின்றார் என தெரிந்து கொண்ட பின்னர் படத்தில் தானும் இணைந்து கொள்கின்றேன் என இணைந்து பணியாற்றும் சினிமாக்காரர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இப்படியான நிலையில் மணிகண்டன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் 'லவ்வர்’. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட ஃபீல் குட் படம் என்றால் அது 'குட் நைட்’. இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 



இதுவரை தான் நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு மணிகண்டன் தற்போது முழுக்க முழுக்க காமெடி ரொமான்ஸ் கதைக்களத்தைக் கொண்ட லவ்வர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகின்றது. 


மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.  இந்த நிறுவனம்தான் குட் நைட் படத்தையும் தயாரித்தது. குட் நைட் படத்திற்கு இசையமைத்த ஷேன் ரோல்டன் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.