இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, மிமிக்ரி ஆர்டிஸ்ட் என பன்முகத்திறமை கொண்டவர் மணிகண்டன். குட்நைட் படத்தின் வெற்றிக்கு பிறகு மணிகண்டன் நம்பிக்கை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க தொடங்கியுள்ளார். குட்நைட், லவ்வர், குடும்பஸ்தன் என அடுத்தடுத்து படங்கள் ஹிட் கொடுத்து இளம் கதாநாயகராகவும் மாறியுள்ளார். அதேபோன்று இப்படத்தில் நடித்த ஸ்ரீ கௌரி பிரியா லவ்வர் படத்தை பார்த்து ஆண்கள் என்னை திட்டுவதாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளைஞர்களை கவர்ந்த லவ்வர்
90களில் வந்த காதல் படங்களில் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் குறித்த புரிதல் குறைவாக இருந்தன. ஆணின் காதலை மட்டுமே மையப்படுத்தியே படங்களும் வெளியாகின. அதில், ஆண்களின் காதல் புனிதமானது போன்றும் பெண்களை தாழ்த்தியுமே படங்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சூழலில் சினிமாவின் போக்கும் மாறியிருக்கிறது. குறிப்பாக பிரேக் அப் என்ற சொல்லே அழகாக மாறிவிட்டது. பெண்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை எடுத்துக்கூறும் வகையில் படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் கடந்தாண்டு வெளியான லவ்வர் திரைப்படம் இளைஞர்களை கவர்ந்த படமாக இருக்கிறது.
டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்
காதலில் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் தற்போது அதிகரித்திருக்கிறது. காதலன் காதலியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைத்திருப்பதும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் தவறாக காட்டுவதும் மாதிரியான கதைதான் லவ்வர். உரிய சுதந்திரத்தை இணைக்குக் கொடுப்பதில் இருக்கும் ஆண் மைய மனோபாவம், தனது இயலாமையால் உணரும் பாதுகாப்பின்மை, அது தூண்டிவிடும் சந்தேகப் பொறி என வளரும் நாயகனின் அகச் சிக்கலின் பின்னால் இருந்து இப்படம் பல விசயங்களை பேசியிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலும் இளம் தலைமுறையின் வைப் மோடாகவும் மாறியிருக்கிறது.
பிரேக் அப்
லவ்வர் படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த மணிகண்டன், லவ்வர் படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால், ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் திரையில் பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு அது உறுத்துகிறது. நாம தப்பு பன்றோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பதை வரவேற்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தெலுங்து, தமிழ் படங்களில் பிஸியாக நடித்து காெண்டிருக்கும் ஸ்ரீகவுரி ப்ரியா, லவ்வர் படத்தில் நடித்ததற்கா ஆதரவும் எதிர்ப்பும் எனக்கு வந்திருக்கிறது.
ஆண்கள் திட்டுகிறார்கள்
தனிப்பட்ட முறையில் சமூகவலைதள அக்கவுண்டிற்கு மெஸேஜ் மூலம் காதலிக்கும் பெண்கள் பலரும் இந்த டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து எப்படி வெளிய வருவது என்று தெரியாமல் தவித்தேன். லவ்வர் படம் பார்த்த பிறகு பிரேக் அப் பண்ண தைரியம் வந்திருக்கு. எனக்கான சுதந்திரத்தை இழந்த மாதிரி பீல் பண்ணும்போது இந்த பாட்டு கேட்பேன் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பிரேக்அப் ஆன பசங்க என்னை பயங்கரமா திட்டுறாங்க. நீ ஏன் லவ்வர் படத்தில நடிச்ச. உன்னாலதான் என் லவ்வர் என்னை விட்டு போயிட்டா. இந்த படத்தை பார்த்து பிரேக் பண்ணிட்டா. என் லைஃப் உன்னாலதான் போச்சு திட்டுறாங்க என தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.