லவ் டுடே


பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. இவானா , யோகி பாபு , சத்யராஜ் , ராதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய வாட்ஸப் காதல் குறும்படத்தை மையமாம வைத்து இப்படம் உருவானது. 2கே கிட்ஸ்களின் காதல் பிரச்சனைகளை வைத்து காமெடியாக உருவான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வசூல் குவித்தது. இதனைத் தொடர்ந்து இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. 


லவ்யாப்பா


இந்தியில் இப்படத்திற்கு லப்யாப்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான் நாயகனாகவும்  மற்றும் ஶ்ரீதேவியின் மகள் குஷி கபூர் இப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 


பொதுவாக தமிழில் வெளியாகி பெரியளவில் ஹிட் அடிக்கும் படங்களை பாலிவுட்டில் சுமரான ரீமேக் செய்து வெளியிடுவது. அந்த வகையில் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்த கரண் ஜோகர் பெற்றுள்ளார். அதேபோல் தமிழிலில் பெரும் வரவேற்பைப் பெற்று இந்தியில் ரீமேக் ஆகியிருக்கும் படம் லவ் டுடே.  தமிழில் லவ் டுடே படத்தின் காமெடி காட்சிகளும் பாடல்களும் பெரியளவில் டிரெண்டாகிய நிலையில் இந்தியிலும் இதேமாதிரியான ஒரு டிரெண்டை உருவாக்க படக்குழுவினர் நினைத்துள்ளார்கள். ஆனால் தற்போது வெளியாகியுள்ள இப்பாடலை ரசிகர்கள் இந்த வருடத்தின் முதல் மொக்கைப்பாடல் என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள்.