இனிமேல் இயக்கமா? இல்லை நடிப்பா? என்ற கேள்விக்கு நடிகர் மற்றும் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன், ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.


ட்ரைலர் வெளியான நாள் முதல் லவ் டுடே படத்திற்கு நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. அந்த வகையில், இந்த படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட பிரோமோஷனுக்காக, ஏபிபி நாடு நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை, படத்தின் இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கொடுத்து இருந்தார்.


அதில் நெறியாளர், “இயக்குநராக சினிமா உலகிற்குள் கால்தடம் பதித்து விட்டீர்கள், ஹீரோவாகவும் நடித்து விட்டீர்கள். இனிமேல் இயக்குநராக உங்கள் பயணத்தை துவங்குவீர்களா? அல்லது ஹீரோவாக களம் இறங்க போகிறீர்களா?” என்ற கேள்வியை கேட்டார்.


அதற்கு பதிலளித்த ரங்கநாதன், “ ரெண்டுமே பண்ணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நிறைய கதை வந்துட்டு இருக்கு. இயக்குநர்களுடன் எனக்கு செட் ஆகி விட்டது என்றால், சரியான கதை அமைந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன். அதே போல் என் கதைக்கு வேறு நடிகர்கள் தேவைப்பட்டால், அவங்களுடனும் வொர்க் பண்ணுவேன்.” என்று பதில் அளித்தார்.


மேலும் இது போன்ற பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதை, கீழ் உள்ள உரையாடல் வடிவில் காணலாம்.



கேள்வி : உங்களுக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற பேஷன் உள்ளதா ?


பதில் :  பேஷன் இல்ல, ஆசை இருந்துச்சு. ஆசைக்கும் பேஷனுக்கும் வித்தியாசம் இருக்கும் என நினைக்கிறேன். ஒரு ஆசை இருந்தது  என்றால், அதை நிறைவேற்ற நம்ப மட்டும்தான் இருக்கிறோம்.
நமக்காக நிறைவேற்ற யாரும் இல்லை, அதனால் நான் நிறைவேற்றி கொண்டேன்.


கேள்வி : டைரக்டரா அல்லது நடிகரா.. இதுவா அதுவா ... ஏதாவது ஒன்றுதான் சொல்ல வேண்டும்?
 
பதில் :  நடிப்பு, இயக்கம் என்பதை தாண்டி எடிட்டிங் பிடிக்கும், வி.எஃப்.எக்ஸ் பிடிக்கும். நீங்கள் என்னிடம், நடிப்பு இயக்கம் என்ற இரண்டை மட்டும் எதிர்பார்காதீர்கள். என்னிடம் நான்கு, ஐந்து என பல விஷயம் இருக்கு. இதெல்லாம் ஆசையா இருக்கு. நான் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க மாட்டேன். இந்த ஐந்துமே எனக்கு பிடிக்கும்.


கேள்வி : உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றால் யாரை நடிக்க வைத்து இருப்பீர்கள்?


பதில் : வேறு ஆப்ஷனே இல்லை. நான் மட்டும்தான் நடிப்பேன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.






கோமாளி படத்தின் டைரக்டரான பிரதீப் ரங்கநாதன், இந்தப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு ஜோடியாக நாச்சியார் மற்றும் ஹீரோ படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் பச்சை இலைய தட்டி என்ற பாடல் வைரல் ஆகி வருகிறது.