தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தும், அவரது மனைவியான லதா ரஜினிகாந்தும் தங்களது 41 ஆவது திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.இதனைமுன்னிட்டு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உட்பட பல ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 






இது மட்டுமன்றி வாழ்த்து தெரிவிக்க போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்னால் கூடிய ரசிகர்களை வெளியே வந்த சந்தித்த ரஜினிகாந்த், தனது நன்றியை தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தும், அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கும் இடையே காதல் மலர்ந்த சுவாரஸ்சிய கதையை இங்கு பார்க்கலாம். 


1980 ஆண்டு ரஜினிகாந்த் பாலச்சந்தர் இயக்கிய தில்லு முல்லு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது லதா ரஜினிகாந்த் அவரை பேட்டி எடுப்பதற்காக அங்கு வந்திருக்கிறார். லதாவை பார்த்த மாத்திரத்திலேயே காதலில் விழுந்துருக்கிறார் ரஜினி. 


பேட்டி எடுக்க வந்த லதா தனது வேலையை பார்க்க ஆரம்பிக்க, இரண்டு பேரும் தங்களுக்குள்ளான விறுப்பு வெறுப்புகளை பற்றி மணிக்கணக்கில் பேசியுள்ளனர். இருவருக்கும் பெங்களூர் மிக முக்கிய கனெக்ஷனாக இருந்திருக்கிறது. காரணம், பெங்களூரில் ரஜினிகாந்த் நடத்துனராக வேலை பார்த்து வந்த நிலையில், லதா ரஜினிகாந்தும் அங்கே வசித்திருக்கிறார். 






அந்த நேர்காணலுக்கு பிறகு, அதுவரை வேறு எந்த ஒரு பெண்ணுடனும் உணராத ஒரு உணர்வை லதாவிடம் உணர்ந்த ரஜினி, உடனடியாக அவரிடம் தனது காதலை சொல்லி விட்டார். அதை கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த லதா, மெல்லிய புன்னகையுடன் சம்மதத்தை தெரிவித்து, வீட்டில் வந்து பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார். 




லதா வீட்டில் சம்மதம் தெரிவிப்பார்களா என்று தயங்கிய ரஜினிகாந்த், லதாவின் சகோதரி சுதாவின் கணவரான ஒய்.ஜி. மகேந்திரனிடம் உதவிகேட்டிருக்கிறார். இப்படியும் அப்படியுமாக பயங்கர பதற்றத்துடன் லதாவின் பெற்றோரை சந்தித்த ரஜினிக்கு, தங்களது பெண்ணை தருவதாக கூறி, கல்யாணத்திற்கு சம்மதித்து இருக்கின்றனர் அவரின் பெற்றோர்கள். இதனையடுத்து 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. அதனைத்தொடர்ந்துதான் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா ஆகியோர் பிறந்தனர்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண