பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, அந்த சீசனில் அதிக கவனம் பெற்றார். கவினுடன் காதல், கண்டித்த தந்தை, சேரனின் பாசம் என நிகழச்சியை சுவாரஸ்யமாக்கியதில் லாஸ்லியாவுக்கு முக்கிய பங்குண்டு. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்து வாய்ப்புகளை பெறும் வெகு சிலரில், லாஸ்லியாவும் ஒருவராகிவிட்டார். அவரது கையில் கணிசமான அளவு படங்கள் உள்ள கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில்ல ஜான்பால், ஷாம் சூர்யா இணைந்து இயக்கம் பிரண்ட்ஷிப் படத்தில் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் லாஸ்லியா. அர்ஜூன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஸ், சக்தி, வேல்முருகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 




இந்நிலையில் தான் நடிக்கும் ப்ரண்ட்ஷிப் படம் குறித்து லாஸ்லியா பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


நான் சிறு வயதிலிருந்தே தமிழ் படங்களைப் பார்த்து தான் வளர்ந்தேன். ப்ரண்ட்ஷிப் நான் நடித்து முதலில் வெளியாகும் தமிழ் படம். இந்த படம் ஒரு ஆண், பெண் இடையே உள்ள நட்பை பற்றி பேசும் படம். நான் நடிப்புலகிற்கு புதியவள். இப்போது தான் நடிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் கற்றுவிடுவேன். நடிப்பதை விட டப்பிங் பேசுவது தான் கஷ்டமாக உள்ளது. கல்லூரியில் நடக்கும் அரசியல் கலந்த நட்டை பற்றி பேசும் படமாக ப்ரண்ட்ஷிப் இருக்கும். தமிழிலில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது. பெண் ஒருவர் ஆண்களுடன் வாழும் புதுவசந்தம் போல, 2021ன் புதுவந்தமாக ப்ரண்ட்ஷிப் இருக்கும். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ரஜினி ரசிகராக இருந்த படத்தில் நடித்துள்ளார். ரொம்ப ஜாலி பர்சன். அவருடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம், என்று லாஸ்லியா கூறினார்.






 


படம் குறித்தும் பேசிய இயக்குனர்கள் ஜான்பால் மற்றும் ஷாம் சூர்யா கூறுகையில், ‛‛முதல்வன், ஜென்டில்மேல் படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் ஒரு விதமான உணர்வு ஏற்பட்டதாக அர்ஜூன் சார் தெரிவித்தார். ஹர்பஜன் சிங் கோபக்காரராக இருப்பார் என நினைத்தோம். ஆனால் அவர் ரொம்ப ஜாலியானவர். நடிப்பில் அதிக அக்கறை கொண்ட மனிதராக இருந்தார்,’’ என்றனர். 


 




 


லாஸ்லியாவின் இந்த திரைப்பயணம் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என அவரது அனுதாபிகள் சமூகவலைதளத்தில் புகழ்ந்து வருகின்றனர்.