விஜய் டிவியின் லொள்ளு சபா சாமிநாதன் என்றால் அத்தனை பிரபலம். அவரை தெரியாதவர்களே இருக்க முடியாது எனும் அளவிற்கு லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது முழுநீள நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார். தனது மனைவி, குழந்தைகளுடன் கலந்துகொண்ட ஸ்வாரஸ்யமான நேர்காணலில் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டனர். 


 



சுவாமிநாதன் தனக்கு எப்படி திருமணம் நடந்தது என்ற ஸ்வாரஸ்யமான கதையை பற்றி கூறுகையில் "நான் நடிகன் என்பதால் எனக்கு யாருமே பெண் கொடுக்க முன்வரவில்லை. அப்படி இருக்கையில் சினிமா ஆக்டர் என்பதை நான் CA என வரனில் நான் குறிப்பிட்டதால் அதை பார்த்து நான் பெரிய படிப்பு படித்திருக்கிறேன் என நம்பி எனக்கு பொண்ணை கொடுத்து விட்டார்கள். முதலிரவுக்கு முன்னர் என் மனைவின் அண்ணன் என்னை துருவி துருவி கேள்வி கேட்டார். நான் எப்படியோ சமாளித்து விட்டேன். அதற்கு பிறகு என் மனைவி கூறிய போது தான் தெரிந்தது அவர் நான் ஆடிட்டர் படித்தவன் என் நம்பிக்கொண்டு இருக்கிறார் என்பது. இப்படி ஒரு காமெடி எனது திருமணத்தில் நடந்தது எனக்கே தெரியாது. ஆனால் எனது மனைவிக்கு நான் ஒரு நடிகன் என்பது முன்கூட்டியே தெரியும். என்னை சீரியல் சினிமாவில் ஏற்கனவே பார்த்து இருக்கிறார். திருமணத்திற்கு முன்னரே அவர் என்னை வாட்ச் செய்ததால்தான் நான் அவரை கேட்ச் செய்துவிட்டேன்" என்றார்.


நடிகர் சுவாமிநாதன் மனைவியிடம் 35 ஆண்டுகளாக உங்கள் கணவர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார். அப்படி இருக்கையில் ஒரு குடும்ப தலைவியாக நீங்கள் அவரை பற்றி எந்தெந்த விஷயங்களில் எல்லாம் பெருமைப்பட்டு உள்ளீர்கள் என கேட்டதற்கு பதிலளிக்கையில் " நான் இவரின் மனைவியாக இருப்பதில் பல இடங்களில் பெருமையாக உணர்ந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து படங்களுக்கு போகும் போது அல்லது ஏதாவது நிகழ்ச்சிக்கு போகும் போது அங்கு அவருடன் பல பேர் செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள்" என்றார்.


சுவாமிநாதன் மகள் ஐஸ்வர்யா பேசுகையில் " நான் அஜித் சாரின் மிகப்பெரிய ஃபேன். அவருடைய விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் சாரை வேஷ்டி சட்டையில் பார்த்து விட்டு சந்தோஷத்தில் பயங்கரமாக தியேட்டரில் கத்தினேன். அந்த படத்தில் அப்பா மகள் செண்டிமெண்ட் எப்படி இருந்ததோ அதே போல தான் நானும் எனது அப்பாவும். பொதுவாக அப்பா அவ்வளவு சீக்கிரமா எமோஷனல் ஆகமாட்டார். ஆனால் இந்த திரைப்படத்தில் அவரே பயங்கரமாக பீல் ஆகிவிட்டார். நான் எப்போதுமே அப்பாவின் செல்லம் தான் ஆனா அம்மா என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்” என்றார். 


மேலும், “எனக்கு பைக் ஓட்ட தெரியாது. அதனால் அஜித் சார் மாதிரி என்னோட பொண்ண பைக்ல வைச்சு ஓட்ட முடியலேயே என ரொம்பவும் பீல் ஆனது" என்றார் ஸ்ரீனிவாசன் 


இவ்வளவு கலகலப்பாக இருக்காரே வீட்டில் அம்மாவோட சண்டை எல்லாம் போடுவாரா என் கேட்டதற்கு "வீட்டில் எந்த நேரம் பார்த்தாலும் சண்டை தான். இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி போல எப்பவும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு சண்டை போட்டு கொள்வார்கள். அதற்காக அடிதடி எல்லாம் இல்லை வாய் சண்டை தான் நடக்கும்" என்றார் மகள் ஐஸ்வர்யா.