லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலேயே இப்படத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய லோகேஷ் கனகராஜ் மீது சமூக வலைதளத்தில் வெறுப்பை காட்டினர். தற்போது இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது கூலி திரைப்படம். ஓடிடியில் கூலி படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம். கூலி ஒரு வீக்கான படமா? அல்லது ரசிகர்களின் வன்மமா ?
கூலி ஓடிடி விமர்சனம்
கூலி திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்கைப் போலவே ரஜினியின் ஏ ஐ காட்சிகளை ரசிகர்கள் அதிகம் ரசித்து வருகிறார்கல். இந்திய சினிமாவில் இதுவரை பல படங்களில் ஏ.ஐ பயண்படுத்தப்பட்டிருந்தாலும் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் ஏஐ பயண்படுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்களை பெற்றுள்ளது
அனிருத்தின் பின்னணி இசை
அதே போல் படத்தின் மிகப்பெரிய பக்கபலமாக இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். பாடல்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு காட்சியையும் தனது பின்னணி இசையால் பல மடங்கள் உயர்த்தியிருக்கிறார் அனிருத். கூலி படத்தின் OST அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் இந்த பிஜிஎம்களை ரசிகர்கள் விரும்பி கேட்டு வருகிறார்க்ள்.
நாகர்ஜூனா வேஸ்ட்
படத்தில் அதிகம் ஹைப் கொடுக்கப்பட்ட நாகர்ஜூனாவின் காட்சிகள் ஓடிடி ரசிகர்களையும் கவரவில்லை. நாகர்ஜூனாவின் தோற்றம் மிரட்டலாக இருந்தாலும் அவரது கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே சுமார்தான் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
திரையரங்கில் படம் பார்த்து பிடித்த ரசிககர்கள் மீண்டும் ஒருமுறை ஓடிடியில் படம் பார்த்து படத்தை பாராட்டி வருகிறார்கள்.