லோகேஷூடன் அவரது ஆதர்ச கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் விஜயின் 67 ஆவது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. 

Continues below advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அடுத்ததாக விஜயின் 67 ஆவது படத்தை இயக்க இருக்கும் தகவல் முக்கால்வாசி உறுதியாகிவிட்டது. இந்தப்படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் இந்தப்படத்தில் லோகேஷ் கனகாராஜ்ஜிற்கு பலம் சேர்க்கும் வகையில்  இந்தப்படத்தில் ஒரு முக்கிய பிரபலம் இணைய இருக்கிறாராம். அது வேறு யாரும் இல்லை.. கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வசனம் மற்றும் திரைக்கதைக்கு உதவியாக இருந்த இயக்குநர் ரத்னகுமார்தான்.

 

Continues below advertisement

முன்னதாக லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் எனக்கு பல விதங்களில் உதவியாக இருக்கிறார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்தப்படத்தில் ரத்னகுமார் லோகேஷின் கூட்டணி தொடர இருக்கிறது. நடிகர் விஜய் தற்போது அவரது 66 ஆவது படமான  ‘வாரிசு’படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்தப்படத்தின் போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. தெலுங்கில் பிரபல இயக்குநராகவும், தமிழில் ‘தோழா’ படத்தை இயக்கியதன் மூலமும் பிரபலமான இயக்குநர் வம்சி இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.