லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'லியோ'.
மியூட் போடப்பட்ட அந்த வார்த்தை :
கடந்த வாரம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ படத்தின் ட்ரைலரில் நடிகர் விஜய் பேசிய ஒரு வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவரின் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் அவர் பேசிய அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டது.
தளபதி பெயரால் வந்த சர்ச்சை :
அந்த சர்ச்சையை தொடர்ந்து அடுத்ததாக நேற்று வெளியான 'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகளுக்கான அரசின் அனுமதி அரசாணையில் "தளபதி விஜய்" என குறிப்பிடப்பட்டு இருந்தது. திமுகவினரால் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தளபதி என அழைக்கப்படுவதால் அந்த பெயரை குறிப்பிட்டு அரசாணை வெளியானதால் அதனை தயார் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளன என புதிதாக ஒரு சர்ச்சை கிளப்பி அது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு காட்சிக்கான அனுமதி :
மேலும் அக்டோபர் 12ம் தேதி வெளியாக இருந்த லியோ படத்திற்கான சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அக்டோபர் 12ம் தேதிக்கான சிறப்பு காட்சிக்கான அனுமதியை அரசாணை மூலம் வெளியிட்டது தமிழக அரசு.
முதல் காட்சியின் நேர மாற்றம் :
அதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் அனுமதியின் படி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடப்பட அனுமதி அளித்திருந்த நிலையில் அதிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. சிறப்பு காட்சி என்ற உடன் காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தெளிவான அரசாணை ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
நிபந்தனைகள் என்ன?
உச்சத்தை தொடும் எதிர்பார்ப்பு :
இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் மீது இருக்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு போகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் மிகவும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் அதை ரத்து செய்யப்பட்டதே மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.