சூர்யா

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடிவாங்கியது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 , வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசன் என தரமான படங்களை கையில் வைத்துள்ளார் சூர்யா. 

கைவிட்டு போன இரும்புகை மாயாவி

இந்த படங்களை தவிர்த்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் படம் நீண்ட நாள் காத்திருப்பில் உள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜின் கனவுப்படமான இரும்புக்கை மாயாவி படத்திலும் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தின் கதையை ஏற்கனவே சூர்யாவிடம் சொல்லியிருப்பதாகவும் சந்தர்ப்பம் அமையும் போது இந்த இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். 

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை அவர் இயக்க இருக்கிறார். கைதி 2 படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் ஆமீர் கான் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவுக்கு சொன்ன இரும்பு கைமாயாவி படத்தின் கதையை ஆமீர் கானிடம் லோகேஷ் சொன்னதாகவும் இருவரும் சேர்ந்து இந்த படத்தில் பணியாற்ற இருப்பதாகவும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்

ஏற்கனவே இந்தியில் சூர்யா நடிக்க இருந்த கர்ணன் படம் டிராப் ஆனது. தற்போது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த இரும்பு கை மாயாவி திரைப்படமும் சூர்யா கையை விட்டு போயுள்ளது ஏமாற்றம் அளித்துள்ளது. 

கூலி

கூலி படத்தில் நாகர்ஜூனா , உபேந்திரா , செளபின் சாஹீர் , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆமீர் கான் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.