ஆகஸ்ட் 14 வெளியாகும் கூலி
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கூலி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாக இருப்பதை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். பிற நாடுகளில் படத்திற்கான முனபதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் கூலி படத்திற்கான முன்பதிகள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் துவங்க இருக்கின்றன. படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல்வேறு நேர்காணல்களில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் நடிக்க இருந்த படம் ஒன்றைப் பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
பராசக்தி படத்தில் வில்லன்
லோகேஷ் கனகராஜ் முன்னதாக ஸ்ருதி ஹாசன் இயக்கிய இனிமேல் பாடலில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் ஆக்ஷன் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக தாய்லாந்தில் சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார். சிவாகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க சுதா கொங்காரா தன்னை அனுகியதை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துகொண்டார். அந்த படத்தின் கதை தனக்கு ரொம்ப பிடித்திருந்ததாகவும் சிவகார்த்திகேயனும் தன்னை நடிக்க ஊக்குவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது கூலி படத்தை இயக்கி வந்ததால் நேரம் ஒத்துழைக்கவில்லை என்பதால் இப்படத்தை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. " என லோகேஷ் தெரிவித்துள்ளார்
கூலி படக்குழு
கூலி படத்தில் ரஜினிகாந்த் , நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர் , சத்யராஜ், சார்லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் படத்திற்கு ஓளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.