விக்ரம் படத்தின் ட்ரெய்லரில் கமல் இந்த மாதிரி நேரத்திலெல்லாம் வீரர்களெல்லாம் சொல்வது பார்த்துக்கலாம் என்பார். இந்த பார்த்துக்கலாம் என்ற வசனம் உருவான சுவாரஸ்சிய கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ இந்த சமயத்துல தலை சிறந்த வீரன் என்ன சொல்வான் தெரியுமா டயலாக்குக்கு பேப்பர்ல வேற வசனம் தான் இருந்துச்சு. பொதுவா கமல் சாரோட படங்கள்ல பயம் - னா என்னன்னு தெரியுமா.. வீரம் - னா என்னன்னு தெரியுமா.. போன்ற வசனங்கள் இருக்கும்.. அப்படி ஒரு பவர் ஃபுல்லான வசனத்தை இதுலையும் வைக்க நினைச்சோம்.
ஒரு நாள் நல்ல மழை பெய்ஞ்சிட்டு இருந்துச்சு... எப்பவுமே இப்படியான நேரங்கள்ள எங்ககிட்ட எக்ஸ்ட்ராவா இன்னொரு ப்ளான் இருக்கும். ஆனா அன்னைக்கு ஏதும் இல்ல. அப்படி என்னோட அசோசியேட் இப்ப என்ன பண்றதுனு கேட்க.. விட்றா பாத்துக்கலாம் னு சொன்னேன். அந்த டயலாக் எனக்கு அப்படியே ஸ்ரைக் ஆய் நின்னுச்சு. அதையே நான் அப்படியே படத்துல யூஸ் பண்ணிக்கலாமா கமல் சார்ட்ட கேட்டேன். சார் உனக்கு என்ன தோணுதோ அத செய்ன்னு சொன்னாரு. அப்புறம்தான் அந்த டயலாக்கை நான் வைச்சேன்.. ” என்று பேசினார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் 1986-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். ராஜசேகர் இயக்கிய இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மீண்டும் விக்ரம் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். பழைய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.