தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லியோ. இந்த படத்தில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதற்கடுத்து ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “ லியோ படத்தின் இரண்டாம் பாகம் அமைய எல்லா வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் அமைய வேண்டும். தளபதி விஜயின் குறிக்கோள் வேறு எங்கோ உள்ளது. அதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். லியோ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது. தளபதி விஜய் எப்போது அழைத்தாலும் லியோ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக சந்திக்க நான் தயாராக உள்ளேன். சூப்பர் ஸ்டார் படத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.
காஷ்மீர் எப்போதும் எங்களின் எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும். படப்பிடிப்பை சிரமமின்றி நடத்த உதவி செய்த அனைவருக்கும் பாராட்டுகள்” என கூறியிருந்தது. எதிர்கால திட்டத்தில் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளதால், லியோ பாகம் 2 எடுக்கப்படும் என அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக இருந்தது.