கூலி படத்தின் கதை
லோகேசஷ் கனகராஜின் கூலி படத்தின் கூலி படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்ஸ் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள தகவல்படி இப்படத்தில் ரஜினியின் பெயர் தேவா. லோகேஷ் கனகராஜ் தன் படத்தைப் பற்றிய ஹின்ட்களை கொடுக்க தொடங்கிவிட்டார். ரசிகர்கள் டீகோட் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அந்த மாதிரியான் ஒரு ரசிகரின் டீகோடிங் தான் இந்த கதை.
கூலி - தளபதி
தேவா என்கிற பெயரைச் சொன்னால் முதலில் நமக்கு இரண்டு கதாபாத்திரங்கள் நினைவுக்கு வரும். ஒன்று மணிரத்னம் இயக்கிய தளபதியில் மம்மூட்டி நடித்த தேவா. இன்னொன்று அயன் படத்தில் சூர்யா நடித்த தேவா. லோகேஷ் கனகராஜ் ரஜினி நடித்த தேவா படத்தை பலமுறை பார்த்திருப்பதாகவும் தான் அந்த படத்திற்கு பெரிய ரசிகர் என்றும் சொல்லியிருக்கிறார்.
கமல் நடித்த விக்ரம் படத்தின் அடுத்த பாகமாக சமீபத்திய விக்ரம் படத்தை எடுத்தார். அதேபோல் விஜயின் மாஸ்டர் படத்தில் கில்லி படத்தின் காட்சியை ரெஃபரன்ஸ் கொடுத்தார். இப்படி ஸ்டார்களின் கிளாசிக் படங்களுக்கு ஒரு ஸ்பின் ஆப் பற்றிய கதை அமைப்பது தனக்கு பிடிக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார். ஏன் ஒருவேளை தளபதி கதையில் தேவா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே கூலி படமாக இருக்கக் கூடாது?
கூலி படம் பற்றி லோகேஷ் இப்படி தெரிவித்திருந்தார் ' இந்த படம் தனக்கே ஒரு புது முயற்சியாகவும் ரஜினியை ஒரு புதிய பார்வையில் காட்டும் . அதே போல் இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல் இரண்டும் கலந்தே இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். ஒருவேளை நல்லவனும் கெட்டவனுமாக தெரிந்த அந்த தேவா இடத்தில் ரஜினி இருந்தால் எப்படி இருக்கும் என்கிற லோகேஷின் கற்பனையாக கூலி இருக்கலாமில்லையா.
அப்போது அடுத்த கேள்வி யார் அந்த சூர்யா என்பதாக தானே இருக்க வேண்டும்.
சத்யராஜ்
கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் சத்யராஜும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த முறை ஒரு மாற்றத்திற்காக அவர் இந்த படத்தில் ரஜினியின் நண்பனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. சத்யராஜின் கேரக்டர் பெயர் என்னவோ ராஜசேகரன் தான். ஆனால் ரஜினி ரகுவரன் கெமிஸ்ட்ரி போலவே ரஜினி சத்யராஜ் கெமிஸ்ட்ரி ஒரு கிளாசிக். ஏற்கனவே சிவாஜி மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் வில்லனாக நடிக்க சத்யராஜூக்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்த கதாபாத்திரங்கள் அவ்வளவு சுவாரஸ்யமானவையாக இல்லை என்றும் சத்யராஜ் தெரிவித்தார். இரண்டு முறை கன்வின்ஸ் ஆகாதவரை , இன்னொரு கிளாசிக் கேரக்டரின் ஸ்பின் ஆப் தவிர வேற என்ன கதை சொல்லி சம்மதிக்க வைத்திருக்க முடியும்?
இப்படி அந்த லோகேஷ் கனகராஜ் ரசிகர் தானாக ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் பாவம்