லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கி கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது லியோ திரைப்படம். விஜய் த்ரிஷா , கெளதம் மேனன், அர்ஜூன் . சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க சாண்டி மாஸ்டர், மிஸ்கின் , பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், அனுராக் கஷ்யப், உள்ளிட்டவர்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் பின்னணி இசையமைத்து மனோஜ் பரமஹம்ஸா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 


லியோ வசூல்


தமிழ், இந்தி , கன்னடம் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிய லியோ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 148 கோடி வசூல் செய்தது. தற்போது லியோ படத்தின் 12 நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு. உலகளவில் 12 நாட்களில் மொத்தம் 540 கோடிகள் வசூல் ஈட்டியுள்ளது லியோ திரைப்படம்.






லியோ - கேள்விகளும் பதிலும்


லியோ படம் குறித்த பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் இணையதளத்தில் எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக எல்.சி யுவில் லியோ இணைந்துள்ளதை தொடர்ந்து லியோ படத்திற்கு இதுவரை எல்.சி யுவில் இருக்கும் கைதி மற்றும் விக்ரம் படத்துடம் பலவிதங்களில் லியோ படத்தை இணைத்துள்ளார்கள் ரசிகர்கள். இந்த கேள்விகளுக்கான பதில்களையும் லியோ படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.


லியோ 2


”லியோ படத்தின் இரண்டாம் பாதி பற்றி பல்வேறு விமர்சனங்களை விமர்சகர்கள் எனக்கு தெரிவித்தார்கள். நான் விமர்சனங்களை ஏற்றுக்கொள்பவன். நிச்சயம் என்னுடைய அடுத்த படங்களில் இந்த குறைகளை சரி செய்வேன். லியோ படத்தில் ஃபிளாஷ்பேக் பகுதி மட்டுமே படத்தின் 40 நிமிடங்களுக்கு இருந்தது.  அது எனக்கு பிடித்திருந்தாலும் நேரம் கருதி அந்த பகுதிகளை குறைத்து விட்டோம்.


 லியோ கதாபாத்திரத்தில் இருக்கும் கெட்ட குணங்களை நான் நியாயப்படுத்தவில்லை. நம் நம்முடைய இளைய வயதில் நம்முடைய அப்பாவிடம் நல்ல பெயர் எடுக்க சில விஷயங்கள் செய்வோம் இல்லையா, லியோ அந்த மாதிரியான ஒருவன். தன்னுடைய அப்பா அந்தோனி தாஸுக்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் லியோ செல்வான். கெளதம் மேனன் பார்த்திபனின் சட்டை இல்லாமல் பார்க்கும்போது பாத்தியின் உடலில் குண்டடி பட்ட எந்த தடமும் இருப்பதில்லை. அதே போல் கஃபே சீனுக்குப் பின் பார்த்திபனை பார்த்தி என்று யார் அழைத்தாலும் அவர் திரும்புவதில்லை. இந்த மாதிரி படத்தில் நிறைய இடங்கள் இருக்கின்றன.


எதிர்காலத்தில் லியோ படத்தின் இரண்டாம் பாகத்தை நான் எடுத்தேன் என்றால் அப்போது  இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு எல்லாம் நிச்சயம் பதில் கொடுப்பேன்” என்று லோகேஷ் கூறியுள்ளார்