லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. த்ரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், இயக்குநர் அனுராக் கஷ்யப், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.


லியோ விமர்சனம்


உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் லியோ திரைப்படம் கொண்டாடப்பட்டது. இன்னொரு பக்கம் ஒரு தரப்பினர் படத்தை விமர்சித்தனர். லியோ படத்தின் இரண்டாம் பாதி சூப்பரா சுமாரா என்பது ரசிகர்களுக்கு இடையில் முடிவடையாத விவாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ படத்தின் மீதான விமர்சனம் படத்தில் வசூலை பெரிய அளவில் பாதிக்கவில்லை.


லியோ முதல் நாள் வசூல் கிளப்பிய சர்ச்சை


லியோ திரைப்படம் உலக அளவில்  முதல் நாளில் மட்டும் 148 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிருவனம் தகவல் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து பலவித கேள்விகள் எழுந்தன. திட்டமிட்டதைவிட குறைவான திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியானபோது ஒரே நாளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையை வசூலாக எடுப்பது அசாத்தியம் எனவே தயாரிப்பு நிறுவனம் வசூலை திரித்து சொல்வதாக இணையதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்தார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் படத்தின் வசூல் குறித்த எந்த தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது.


பதில் கொடுத்த லியோ 7 நாள் வசூல்


இப்படியான விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் லியோ திரைப்படத்தின் முதல் 7 நாட்களின் வசூலை வெளியிட்டது படக்குழு. தமிழ் சினிமா வரலாற்றில் 7 நாட்களில் எந்த படமும் எடுக்காத வசூலை லியோ படம் எடுத்துள்ளது. 7 நாட்களில் ரூ 461 கோடி வசூலித்து லியோ படம் சாதனைப் படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் வசூல் மீதான அனைத்து கேள்விகளும் நின்றுவிட்டன.


500 கோடிகளைக் கடந்த வசூல்


இந்நிலையில், தற்போது  லியோ திரைப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆகும் நிலையில் லியோ படத்தின் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.  இதன்படி 12 நாட்களில் உலகளவில் ரூ 540 கோடி வசூல் செய்துள்ளது லியோ திரைப்படம்.