விக்ரம் படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நான் எப்போதும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. விக்ரமுக்கும் எனக்கும் நீங்கள் கொடுத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்திருக்கிறது. நீங்கள் தந்த அன்பிற்கு கைமாறாக நான் என்ன திருப்பித்தரபோகிறேன் என்று தெரியவில்லை. இதை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த கமல்ஹாசன் சாருக்கும், என்னுடைய மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடையவனாக இருப்பேன். நான் நெகிழ்ந்து விட்டேன். லவ் யூ ஆல்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்தக்கடனை நீங்கள் திருப்பி தருவதற்கான ஒரே வழி நீங்கள் மனநிறைவு அடையாமல் இருப்பதுதான். நீங்கள் உண்மையாக உழையுங்கள். அவர்கள் அதற்கான அன்பையும் மரியாதையையும் அவர்கள் தருவார்கள். என்னுடைய ஆற்றல் அவர்களிடம் இருந்துதான் கிடைக்கிறது. எல்லா சக்தியையும் உங்களுக்கும் கிடைக்கட்டும். ராஜ்கமல் நிறுவனம் உங்களுக்கு உறுதுணையாக இருந்ததில் பெருமை கொள்கிறது. இதை நாங்கள் செய்தது போலவே உணர்கிறோம். கலக்குங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.