லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் லியோ திரைப்படத்துக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடுவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
நா ரெடி
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியானது. மொத்தம் 2000 நடனக் கலைஞர்களைக் கொண்டு 8 நாட்கள் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை திரையரங்கத்தில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் இந்தப் பாடலுக்கு முன்னும் பின்னும், மிக சிறப்பான அதிரடிக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார். அப்போது நா ரெடி பாடல் உருவான விதம் குறித்து அவர் பேசினார்.
ஜும்மா சும்மா பாடல்
”நா ரெடிதான் பாடல் பற்றி அனிருத்திடம் சொல்லும்போது நான் அவருக்கும் உதாரணமாக அமிதாப் பச்சனின் ஜும்மா சும்மா பாடலைக் காட்டினேன். இந்த மாதிரியான ஒரு மூடில் தான் எனக்கு இந்தப் பாடல் வேண்டும் என்று நான் கேட்டேன்.” என்று தெரிவித்தார்.
இந்த தகவலை அவர் தெரிவித்ததில் இருந்து விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் அமிதாப் பச்சனின் ‘ஜும்மா சும்மா’ பாடலை ரிபீட் மோடில் கேட்டு வருகிறார்கள். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்த ஹம் என்கிற படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ஜும்மா சும்மா.
இந்தப் பாடலைப் பார்க்கும் போது பாட்டு மட்டும் இல்லாமல் மொத்த செட்டை ‘நா ரெடி’ பாடலில் லோகேஷ் கனகாராஜ் உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் என்பதைப் பார்க்கலாம். அதே ஃபாக்டரி மாதிரியான இடம், அதே போல் நுற்றுக்கணக்கான நபர்கள் கையில் மதுக்கோப்பைகளுடம் இருப்பது, பீடி பிடித்தபடி அமிதாப் பச்சன் எண்ட்ரி கொடுப்பது என அத்தனை அம்சங்களையும் நா ரெடி பாடலில் சேர்த்திருக்கிறார் லோக்கி.
என்ன மிஸ்?
அபிதாப் பச்சன் மட்டும் கிமி கட்கர் இருக்கும் இந்தப் பாடல் முழுக்க முழுக்க ஒரு மசாலா பாடலாக உருவாகி இருக்கும் நிலையில், நா ரெடி பாடலில் கிமி கட்கருக்கு பதிலாக வேறு எந்த நடிகையாவது வந்து விஜய்யுடன் நடனமாட வாய்ப்பிருக்கிறதா, இல்லை அந்த இடத்தை லோகேஷ் கனகராஜ் தவித்திருப்பாரா என்கிற கேள்வி இருந்து வருகிறது. முன்னதாக நேர்காணல் ஒன்றில் நடிகை கிரண், தான் லியோ படத்தில் நடித்திருப்பதாக தெரிவித்த நிலையில், நா ரெடி பாடலில் கிரண் நடிக்க வாய்ப்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் பாடலில் இருந்த அதே வைப், நா ரெடி பாடலில் இரு மடங்காக இருக்கும் என்பதை மட்டும் எதிர்பார்க்கலாம்.