தமிழ் சினிமாவின் சமீபத்தில் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் என்றால் அது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தான். மாநகரம் திரைப்படத்தின் மூலம் 2017ஆம் ஆண்டு இயக்குநராக தன் பயணத்தை தொடங்கிய லோகேஷ், சுமார் எட்டே ஆண்டிகளில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என தன் கதாபாத்திரங்களுக்கென ஒரு உலகையே க்ரியேட் செய்து தமிழ் சினிமா ரசிகர்களை எப்போதும் எதிர்பார்ப்பிலேயே வைத்திருந்து லைக்ஸ் அள்ளி வருகிறார்.
கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை தன் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைத்துள்ள லோகேஷ், அடுத்ததாக இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களிள் ஒருவரான நடிகர் ரஜினிகாந்தை இயக்குகிறார்.
தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுத்துள்ள லோகேஷ் இப்படத்துக்காக தன்னை முழுவீச்சில் தயார் செய்து வருகிறார்.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் இன்று தன் 38ஆவது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார். இந்நிலையில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பாடல் ஒலிக்க தன் நண்பர்களுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் கேக் வெட்டி ஜாலியாக பிறந்தநாள் பார்ட்டி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.