தமிழ்சினிமாவில் ஏறக்குறைய 800 க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் சார்லி. தன்னுடைய தனித்தன்மையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர். குறிப்பாக விஜய், அஜித், கமல், ரஜினி, என பல முன்னணி நடிகர்கள் படங்களில் இவரை அதிக அளவு முடியும். இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் ஆரம்பமான சினிமா பயணம், இன்று வரை தொடர்ந்து வருகிறது. மேலும் கடந்த சில வருடங்களாக, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் மாநகரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் செய்திருந்தார், அந்த கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கியதற்காக வெகுவாக பாராட்டப்பட்டார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் அடுத்தடுத்து, கைதி, மாநகரம் என்று பெரிய படங்கள் செய்து ஹிட்டடிக்க, கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் விக்ரம் திரைப்பட வெளியீட்டு தேதியை அறிவிக்க காத்திருக்கிறார்.
அவரது வளர்ச்சி குறித்து சமீபத்திய நேர்காணலில் நடிகர் சார்லி கூறியிருந்தார். அவர் பேசுகையில், "மாநகரம் படம் முழுவதும் புதுமுகங்கள், ஏன் என்னை மட்டும் தெரிந்த நடிகராக தேர்வு செய்கிறீர்கள், இந்த கதாபாத்திரமும் ஒரு புது முக நடிகரால் செய்யப்பட்டால் நன்றாக இருக்குமே என்றேன். அதற்கு லோகேஷ் கனகராஜ் மேடையில் அதற்கான பதிலை சொன்னார். 'தன்னை எப்போதுமே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய நடிகர் சார்லி, அவர் போன்ற நடிகர்கள்தான் எங்களுக்கு தேவை. அவரிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அவரிடம் இருந்து ஒரு புதுமையை எடுத்து அதில் புகுத்துவார்' என்று கூறினார். இவர் போன்ற இயக்குனர்களால், படைப்பாளிகளால்தான் இது போன்ற புதுமைகள் நிகழ்கின்றன.
என்னை போன்ற நடிகர்களுக்கு இவர்களின் வார்த்தை மிகவும் அவசியம், இன்னும் நம்பிக்கையை அளிக்கும். இன்னும் புதிதாக மக்களுக்கு கொடுப்போம். என்னிடம் கதை சொல்ல வந்தபோது, லேப்டாப்பை திறந்து ஒரு புகைப்படத்தை காண்பித்தார். அதில் எல்லாம் அவுட் ஆஃப் போக்கஸில் இருந்தது, ஒன்றே ஒன்று மட்டும் நடுவில் தெளிவாக தெரிந்தது… நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்றேன். என்ன சார் நிறைய பேசுவீங்கன்னு பாத்தேன், இப்படி முடிச்சிட்டீங்க, என்றார். ஆமாம் நீங்க நெறய சொல்லுவீங்கன்னு பாத்தேன், ஒரு படத்தை காட்டி முடிச்சிட்டீங்க, அதான் நானும் சுருக்கமா பேசிட்டேன் என்றேன்.
எனக்கும் லோகேஷுக்கும் நல்ல உறவு இருக்கிறது. என் மகன் போன்றவர் அவர். மிகவும் திறமையான, அவரசப்படாத கலைஞன். சுறுசுறுப்பாக இருப்பார் எப்போதும், ஆனால் நிதானத்துடன் செய்யும் வேலையில் தீர்க்கமாக இருப்பார். கண்டிப்பாக தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து செல்வர் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. என்னை மென்மேலும் அவரது படங்களில் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையும் உண்டு.
விஜய் எல்லாம் வேற லெவல் நடிகர், இந்த பத்தாண்டுகளில் கதை தான் ஹீரோ என்று ஆகிவிட்டதை ஏற்றுக்கொண்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்கு இடம் கொடுத்து நடிப்பவர்கள் தான் நிற்க முடியும் என்று வெகு சீக்கிரமாகவே உணர்ந்து கொண்ட நடிகர். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் எல்லாம் என்னை மிகவும் கவர்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதைகள் பிரமிக்க வைக்கின்றன. அருள்நிதியோடு நடித்தேன், அவ்வளவு தரமான நடிகர். எல்லா காதபாத்திரத்திற்கும் பொருந்தும் க்ளீன் ஸ்லேட் அவர்." என்று தற்கால நடிகர்கள் குறித்து அவர் பார்வையை கூறினார்.