Mammootty: கே.ஜி .எஃப் யாஷ் முதல் மம்மூட்டி வரை... மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்

கேரள மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் மம்மூட்டி

Continues below advertisement

மக்களவை தேர்தல் 2024

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், நாட்டில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. , 

வாக்களித்த திரைப் பிரபலங்கள்

கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

ஃபகத் ஃபாசில் 

நடிகர் ஃபகத் ஃபாசில் ஆலப்புழா தொகுதியில் இன்று காலை வாக்களித்துவிட்டு திரும்பினார்

டொவினோ தாமஸ்

நடிகர் டொவினோ தாமஸ் இன்று அதிகாலை தனது ஜனநாயக கடமையாற்றி சமூக வலைதளத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்தார்

மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி எர்ணாகுளம் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்

பிரகாஷ் ராஜ்

தென்னிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது . பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகரான பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். பெங்களூர் மத்திய தொகுதியைச் சேர்ந்த அவர், காலையிலே அவர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்

கிச்சா சுதீப்

கன்னட நடிகர் கிச்சா சுதீப் கர்நாடகாவில்  தனது வாக்கை பதிவு செய்து தனது ரசிகர்களையும் தவறாமல் வாக்களிக்க அறிவுறுத்தினார்

 நடிகர் யாஷ்

கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் தனது மனைவியுடன் பெங்களூரில் வாக்களித்தார். 

Continues below advertisement