காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் முன்னிட்டு வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த வண்ண வண்ண வான வேடிக்கைகளை கண்டு ரசித்த பொதுமக்கள்.

 

சித்திரை மாதம் மகா பிரம்மோற்சவம்


காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுந்தராம்பிகை ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோவில் பழமை வாய்ந்ததும் ஆன்மீக பக்தர்கள் ஸ்ரீ கச்சபேஸ்வரரை வழிபட்டு நேர்த்தி கடனை நிறைவேற்றி வழிபாடு செய்வர்.  அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மகா பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம் இரவு சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, திருவாபரணங்கள் அணிவித்து பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 



வான வேடிக்கைகள்


மேலும் ஆன்மீக தலமாக கருதும் காஞ்சிபுரம் பல்வேறு பிரம்மோற்சவத்தின் போது வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டு பொதுமக்கள் கண்டு களிப்பர் அந்த வகையில் சில நாட்களாக பிரம்மோற்சவத்தின் போது சிறிதளவு வான வேடிக்கைகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இரவு ஸ்ரீ கச்சபேஸ்வரர் வெள்ளித்தேர் உற்சவத்தின் போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக வண்ண வண்ண வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டு பொதுமக்கள் கண்கொள்ளா காட்சியாக கண்டு களித்தனர்.




 

இதில் நாகப் பாம்பு வடிவில் வானவெடி தயார் செய்யப்பட்டு அவை பாம்பை போல சீரி அங்கும் இங்குமாக வளைந்து காட்சிப்படுத்துவது போல பாம்பு வெடி அமைந்தது பொதுமக்களை ஆச்சரியத்திலும் காண கண் கொள்ளா காட்சியாகவும் கண்டுகளித்தனர். இதுபோன்ற பிரம்மோற்சவங்களில் வெடிக்கப்படும் பிரம்மாண்ட வெடிகளால் நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் பொதுமக்கள் கண்டு களித்த மிகப்பிரமாண்ட வான வேடிக்கை பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றன.  இதனைத் தொடர்ந்து சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வெள்ளித்தேரின் வடம் பிடித்து இழுத்து ஸ்ரீ கச்சபேஸ்வரரை வழிபட்டு அருள் பெற்றனர்.




காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  ( kanchipuram kachabeswarar temple )


காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  விளங்கி வருகிறது.  இந்தக் கோயில் " கச்சபேசம்" எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலைப்பற்றி காஞ்சிபுரம் புராணத்தில்  தனி படலமாக   அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது.




காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  தல புராணம்


அமிர்தம் எடுப்பதற்காக,  பாற்கடலை  கடைந்த பொழுது  மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில்,  மூழ்கிக் கொண்டிருந்தது.  இதனால் அமிர்தம் கிடைக்காமல்  பணி தடைபடும் அபாயம் இருந்தது.  இதனால் மகாவிஷ்ணு  ஆமை   அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார்.




இதனால் திருமாலுக்கு செருக்கு   உண்டாகியதாக கூறப்படுகிறது.  உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால்  சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை,  வென்டக மலையனிடையே  மறைத்து   வைத்துள்ளார் அதன் பிறகு,  தனது தவறை  உணர்ந்து. இதனை அடுத்து  திருமால்  ஆமை வடிவத்தில்  சிவனை வழிபட்டுள்ளார்.