கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவான லாக்கப்பில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பூனம் பாண்டே, அங்கே சென்றும் தனது கணவர் மீது புகார்கள் சொல்லி புலம்பி வரும் நிலையில், அவர் காரணமாக தான் பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக கூறியுள்ளார். ஆல்ட் பாலாஜி மற்றும் எம்.எக்ஸ் பிளேயரில் லைவ்வாக ஓடிக் கொண்டிருக்கும் புதிய ரியாலிட்டி ஷோ லாக்கப். இந்த ஷோவை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார். அதில், ஒரு போட்டியாளராக பூனம் பாண்டே பங்கேற்று இருக்கிறார். இந்தியில் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், அதே போல ஒரு ரியாலிட்டி ஷோ தான் கங்கனா ரனாவத் ஒடிடியில் தொகுத்து வழங்கி வரும் லாக்கப் ஷோவும். பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு, போட்டியாளர்கள் அனைவருக்கும் கைதி டிரெஸ் கொடுத்து உள்ளே அடைத்து வைத்து சர்ச்சைகளையும், சண்டைகளையும் மூட்டி வருகின்றனர்.



இந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டே என்னவென்றால் பிரபலங்களுக்கு எந்தவொரு சொகுசான வசதியும் கிடையாது. சாதாரண படுக்கை வசதி, அலுமினிய தட்டில் சோறு குறிப்பாக எந்தவொரு பாத்ரூமிலும் கதவே கிடையாது. வெறும் ஸ்க்ரீன் போட்டு மட்டுமே மறைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பூனம் பாண்டே உள்ளிட்ட ஏராளமான விவாகரம் பிடித்த பெண் போட்டியாளர்களும் உள்ளே இருக்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது காதலி பூனம் பாண்டேவை தயாரிப்பாளர் சாம் பாம்பே திருமணம் செய்தார். ஆனால், தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை பலாத்காரம் செய்ததாகவும் பூனம் பாண்டே அவர் மீது பல முறை போலீசில் புகார் அளித்தது பரபரப்பை கிளப்பியது. இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் சமீபத்திய எபிசோடில் தான் தற்கொலை செய்துகொள்ள பல முறை முயன்றதாக குறிப்பிடுகிறார்.






அவர் பேசுகையில், "இந்த சிறை, உணவு, தூக்கம், எனக்கு சொகுசாக தெரிகிறது. நான் நான்கு வருடங்கள் அவருடன் இருந்தேன். என் வாழ்க்கையின் அந்த நான்கு வருடங்கள் என்னால் சரியாக தூங்கக் கூட முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, எதுவும் செய்யமுடியவில்லை. நான் பல நாட்கள் சாப்பிடவே மாட்டேன், அதனால்தான் எனக்கு வட பாவ் சாப்பிட அவ்வளவு ஆசை. என்னை அவர் கடுமையாக அடிப்பார், என்னை ரூமில் அடைத்து வைப்பார். எனது ஃபோன் பழுதடைந்ததால் என்னால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. பல முறை நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளேன்" என்று கூறியது பலரை கலங்கவைத்தது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050