இந்தியாவின் 53ஆவது தேசிய திரைப்படத் திருவிஷா, கோவாவில் நடைப்பெற்றது. இதில், ஏராளாமான படங்கள் திரையிடப்பட்டன. குறிப்பாக, அதில் திரையிடப்பட்ட தமிழ் படம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


லிட்டில் விங்க்ஸ்


இந்திய சமூகம், ஒரு ஆணாதிக்க சமூகம் என்ற கருத்து பல வருடங்களால், பலரால், பல விதங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கில், அவள் ஒரு தொடர் கதை, மகளிர் மட்டும், இறைவி என பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற எத்தனை படங்கள் வந்தாலும் யாரும் திருந்த போவதில்லை என்று பலர் அவ்வப்போது கூறுவதுண்டு. 


ஆணாதிக்க சமூகத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள படங்களின் வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம், லிட்டில் விங்க்ஸ். இந்த படத்தினை நவீன் குமார் முத்தைய்யா என்பவர் இயக்கியுள்ளார். இப்படம், கேவாவில் நடைப்பெற்ற திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டு பலரையும் கவர்ந்துள்ளது.


கோவாவில் திரையிடப்பட்ட லிட்டில் விங்க்ஸ்


“நாம் கூறும் கதை ஆயிரம் முறை கூறப்பட்டதாக இருந்தாலும், அதை நாம் கூறும் போது தனியாக தெரிய வேண்டும்” என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ளார் லிட்டில் விங்க்ஸ் படத்தின் இயக்குனர் நவீன் குமார் முத்தைய்யா. கோவா திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டதற்கு பிறகு, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது லிட்டில் விங்க்ஸ் படம் குறித்து விளக்கமளித்தார். அவர் பேசியது பின்வருமாறு


“என்னுடைய படம், சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை பற்றியது. அதை, முடிந்தளவு தனித்துவமான முறையில் இப்படத்தின் மூலம் கூறியுள்ளேன். இப்படம், ஒரு ஆண்மகனின் பார்வையில் இருந்து எழுதப்பட்டிருந்தாலும் ஆணாதிக்கத்தினால் நிம்மதியின்றி தவிக்கும பெண்களின் குமுறல்களை விளக்குவதாக இருக்கும். இந்த படத்தை எடுப்பதற்கு நான் படித்த ஒரு சிறுகதைதான் காரணமாக இருந்தது. அதனை எழுத்தாளர் காந்தர்வன் என்பவர் எழுதியிருந்தார். அந்த கதையில், இடம் பெற்றிருந்த நிகழ்வுகளும், நிஜ வாழ்க்கையில் நடைப்பெற்ற நிகழ்வுகளும் இப்படத்தினை எடுக்க என்னைத் தூண்டியது. 


படத்தின் கதை என்ன?


லிட்டில் விங்ஸ் படத்தை குறித்து பேசிய இயக்குனர், “சமூகத்திற்கு கட்டுப்பட்டு.கிராமத்தில் வாழும் கணவன் மனைவியைக் குறித்த படம் இது. கை கால் செயலிழந்த நிலையில் இருக்கும கணவன், தனது மனைவியால் பராமறிக்கப்படுகிறான். ஆனால் இந்த சமூகம் அவனுக்கு கொடுத்திருக்கும் “ஆண்” என்ற கிரீடத்தை அவனால் கழற்ற முடியவில்லை. இதை மைய்யமாக வைத்துதான் லிட்டில் விங்க்ஸ் படத்தை எடுத்துள்ளேன்” என்று கூறினார். இந்த படத்தில் பெண்களின் துன்பங்கள் மட்டுமன்றி, கிரமாப்புறங்களில் இன்றும் நடைமுறையில் உள்ள சில பழக்க வழக்கங்களை பற்றியும் கூறியுள்ளார், இயக்குனர் நவீன். 




முக்கிய நடிகர்கள்:


லிட்டில் விங்க்ஸ் திரைப்படத்தில் காளிதாஸ் என்பவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நண்பன், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் ஆகிய படங்களில் நடித்துள்ள மணிமேகலை இன்னொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கோவாவில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியல் லிட்டில் விங்ஸ் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.