லியோ  - சர்ச்சைகளை கடந்து சாதனை


லியோ திரைப்படம் மொத்தம் 300 கோடி செலவில் உருவாகி இருக்கிறது.  தமிழ். தெலுங்கு, இந்தி , மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளி வருகிறது. லியோ திரைப்படத்தில் ரிலீஸுக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்த. முதலில் பாடல் வரிகள் மற்றும் ட்ரெய்லரின் இந்த வசனத்தை நீக்கச் சொல்லி சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வரிகளை படத்தில் இருந்து ஒலிநீக்கம் செய்தது படக்குழு. இதற்கு அடுத்ததாக லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு முன்னதாக அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டு பின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. திரையரங்க உரிமையாளர்களிடம் மேலும் அதிக விகிதம் பங்கை விநியோகஸ்தர்கள் கேட்டதால் கடைசி வரை படத்தின் டிக்கெட்களை திரையரங்குகள் முன்பதிவிற்கு வெளியிட்டமல் இருந்தன. இதனைத் தொடர்ந்து அந்திர மாநிலத்தில் படத்தை வெளியிடுவதற்கு பெரும் தடை ஏற்பட்டது. இதனை அடுத்து இலங்கையில் படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட இலங்கை தமிழ் எம்.பிக்கள் விஜய்க்கு கடிதம் எழுதினர்.


இத்தனை சிக்கல்களுக்குப் பிறகு அக்டோபர் 19 ஆம் தேதி அனைத்து இடங்களிலும் வெளியானது லியோ திரைப்படம். ஒரே  நாளில் உலகம் முழுவது மொத்தம்  ரூ 148 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படமாக சாதனைப் படைத்துள்ளது லியோ திரைப்படம். இந்திய சினிமா வரலாற்றில் வெளியாகிய முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய ஐந்து இந்தியப் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


பாகுபலி 2


ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ரானா டகுபதி, தமன்னா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பாகுபலி 2 வெளியான முதல் நாளில் மட்டுமே உலகளவில் ரூ  201 கோடி வசூல் செய்து அதிக வசூல் ஈட்டிய இந்தியப் படங்களில் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


ஆர்.ஆர்.ஆர்


இந்த வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் படமும் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம்தான். 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் 190 கோடி வசூல் செய்தது.


கே.ஜி.எஃப் 2


பிரஷாந்து நீல இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் வெளியான முதல் நாளில் ரூ 162 கோடி வசூல் ஈட்டியது.


லியோ


ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ `148 கோடு வசூலித்து இந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம்


ஜவான்


அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை கடைசியில்  நகர்த்தியது லியோ திரைப்படம். முதல் நாளில் ஜவான் திரைப்படம் மொத்தம் 127 கோடி வசூல் செய்தது.