கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டன. 2021ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 28 மொழிகளில் வெளியான 280 படங்கள் இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழில் கடைசி விவசாயி, இரவின் நிழல், உள்ளிட்டப் படங்களுக்கு அந்தந்த பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன . இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தலைமையின் கீழ் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருது அறிவிக்கப்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள். 


கடைசி விவாசாயி


இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி, விவசாயி நல்லாண்டி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தி நடித்திருந்தனர். சிறந்த தமிழ் படத்திற்கான விருதை கடைசி விவசாயி திரைப்படம் வென்றது. கூடுதலாக இந்தப் படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டி அவர்களுக்கு சிறப்பு பிரிவின் கீழ் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து இந்த இந்த விருதுகளை இயக்குநர் மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.






இரவின் நிழலில்


ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழலில் திரைப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயாவா பாடலுக்காக பாடகி ஷ்ரெயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.