தமிழ்நாடு



  • அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவு 

  • இன்றுடன் ஓய்வுபெறுகிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு

  • புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா நியமனம்

  • தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்

  • அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யப்பட்டதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் - முதலமைச்சர்

  • அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனக்கான அதிகாரம் என்ன என்பதை ஆளுநர் அறிந்திருக்கவில்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

  • ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை; ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தன்மாக உள்ளது - சபாநாயகர் அப்பாவு

  • சட்டத்தை மீறி ஆளுநர் செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் 

  • அரசமைப்பின்படி, ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக அதிமுக செம்மலை கருத்து

  • பொது சிவில் சட்டம் தொடர்பாக  பிரதமரின் பேச்சுக்கு முதலமைச்சர் கண்டனம்


இந்தியா



  • நாடு முழுவதும் நேற்று வெகுவிமர்சையாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

  • மணிப்பூரில் பாஜக அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்; பதற்றம் ஏற்பட்டதால் கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடிப்பு

  • மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க பாதுகாப்பு காரணங்களால் அனுமதிக்காத காவல்துறை


உலகம்



  • டைட்டானிக்கைக் காணச்சென்ற நீர் மூழ்கிக் கப்பல் வெடித்ததால் இறந்தவர்களின் உடல் பாகங்கள் மீட்பு

  • சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

  • நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக வழங்க உலக வங்கி முடிவு

  • ஊபர் செயலி மூலம் 800 பேரை அமெரிக்காவுக்கு கடத்திய இந்தியருக்கு சிறை


விளையாட்டு 



  • விறுவிறுப்பாக போகும் டிஎன்பிஎல்; திருச்சியை பந்தாடிய மதுரை 

  • 2வது ஆஷஸ் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் ரன் வேட்டை

  • ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றிய இந்தியா