கடந்த மாதம் பொங்கல், குடியரசு தினம் என ஏராளமான அரசு விடுமுறைகளால் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1 , மெர்ரி கிறிஸ்துமஸ், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை என ஏராளமான திரைப்படங்கள் ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்களை முழுமையாக என்டர்டெயின் செய்தது. பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.
அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரமான இன்று திரையரங்கில் என்னென்ன தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதன் சுருக்கம்.
வடக்குப்பட்டி ராமசாமி :
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. நிழல்கள் ரவி, ஜான் விஜய், எம்.எஸ். பாஸ்கர், மாறன், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், சுரேஷ் பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
டெவில் :
மிஷ்கின் தயாரித்து இசையமைத்துள்ள டெவில் படத்தை ஜி.ஆர். ஆதித்யா இயக்கியுள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், பூர்ணா, திரிகன், சுபஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிக்லெட்ஸ் :
இன்றைய இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இடையில் இருக்கும் தலைமுறை இடைவெளியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. எம். முத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சாத்விக் வர்மா, ரஹீம், ஜாக் ராபின்சன், அமிர்தா ஹல்தார், நயன் கரிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மறக்குமா நெஞ்சம் :
பள்ளிக்கூட நினைவுகளை மீண்டும் கண்முன்னே கொண்டு வரும் வகையில் பள்ளியில் 2008ம் பேச்சில் படித்த மாணவர்கள் மீண்டும் 2018ம் ஆண்டு பள்ளிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மிகவும் வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள இப்படத்தை ராகோ யோகன்றன் இயக்க இதில் ரக்ஷன், மலினா, தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் பல படங்கள் இன்று வெளியாக உள்ளது. தெலுங்கில் அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட், ஆங்கிலத்தில் ஆர்கில், மராத்தியில் ஸ்ரீதேவி பிரசன்னா மாற்றும் சத்ரபதி சாம்பாஜி, இந்தியில் சத்ரபதி சாம்பாஜி, பஞ்சாபியில் வார்னிங் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளன.