நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் தமிழ் சினிமாவின் பப்ளி நடிகருமான பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஏற்கனவே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் வேளையில் அவரின் மகள் ஐஸ்வர்யா பிரபு தனது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.
இந்த நிலையில் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, தமிழ் சினிமாவின் இளம் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்தரனுக்கும் வரும் டிசம்பர் 15ம் தேதி திருமணம் என்றும் அதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வெளியாகவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் நடிக்கும் AK63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தமிழில் வெளியான படங்களின் பட்டியலை பார்க்கலாம் :
திரிஷா இல்லனா நயன்தாரா :
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், கயல் அனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான இப்படம் ஆபாச வார்த்தைகள் நிரம்பிய அடல்ட் காமெடி திரைப்படம். இன்றைய இளைஞர்களின் காதல் கதையை சொல்கிறோம் என்ற கண்ணோட்டத்தில் படு கேவலமாக சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் மோசமான படமாக இருந்தது. படம் முழுக்க முருங்கைக்காய் சிப்ஸ் வசனங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்து. இப்படத்திற்கு எப்படி தணிக்கை குழு 'U' சான்றிதழ் வழங்கியது என்ற கமெண்ட்கள் எழுந்தன.
அன்பானவன் அசரதவன் அடங்காதவன் :
நடிகர் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 2017ம் ஆண்டு வெளியான இப்படமும் ஒரு மாதிரியான படமாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.
வெர்ஜின் மாப்பிள்ளை :
மீண்டும் ஜி.வி.பிரகாஷ் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான கிளுகிளுப்பான படம் தான் வெர்ஜின் மாப்பிள்ளை. ஏற்கனவே வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தால் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இப்படத்தின் டைட்டிலே சர்ச்சையில் சிக்கியது.
பஹீரா :
பிரபுதேவா நடிப்பில் சைக்கோ திரில்லர் ஜானரில் 2023ம் ஆண்டு வெளியான பஹீரா திரைப்படம் காதல் என்ற பெயரில் பெண்கள் ஆண்களை ஏமாற்றும் மோசமானவர்கள் பெண்கள் என பெண்களுக்கு எதிரான தாக்குதலை படமாக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
மார்க் ஆண்டனி :
விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மார்க் ஆண்டனி. அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதையில் ஒரு டைம் ட்ராவல் கான்செப்டை வைத்து வெளியான முதல் படம் இது தான். காமெடி, ஆக்ஷன் கலவையில் வெளியான இந்த என்டர்டைனர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.