ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் கடந்த இரண்டு வாரங்களாக வெளியாகவில்லை. கடந்த வாரம் (ஆகஸ்ட் 24) ஜிவி பிரகாஷ் நடித்த அடியே, பார்ட்னர் போன்ற படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் (செப்டம்பர் 1) தமிழில் 4 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை பார்கலாம். 


குஷி

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இந்த படத்தில் விஜய் தேவரக்கொண்டா- சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். சாகுந்தலம் திரைப்படத்திற்கு பின் சமந்தாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் குஷி. இதனால் சமந்தா ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.


கிக்

கன்னடத்தில் வெளியான லவ்குரு, கானா பஜானா, போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள கிக் திரைப்படம் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி உள்ளது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில்  வெளியான சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், கிக் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


கருமேகங்கள் கலைகின்றன

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. தந்தை - மகன் இடையிலான உணர்வு போராட்டமாக இப்படம்  உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்தப் படத்தில் அதிதீ பாலன், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் இமயம் பாரதிராஜா, யோகி பாபு, உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.


பரம்பொருள்

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பரம்பொருள். பழங்கால சிலை திருட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின்  மூலம் யுவன்ஷங்கர் ராஜாவுடன் முதன்முதலாக இசையமைப்பாளர் அனிருத் இணைந்து பாடல் இன்றை பாடியுள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. புதுவரவாக இத்தனை படங்கள் வரவுள்ள நிலையில், எந்த படம் ரசிகர்களை வெல்லும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


லக்கி மேன் 


பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்துள்ள ‘லக்கி மேன்’. திங்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் என பலரும் நடித்துள்ளனர். 


ரங்கோலி 


இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரங்கோலி'.
முக்கிய கேரக்டரில் ஆடுகளம் முருகதாஸ் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


மேலும் படிக்க 


Neeraj Chopra Mother : வீரனை வீரனா பாருங்க.. பாகிஸ்தான் வீரர் ஜெயிச்சாலும் சந்தோஷம்.. நீரஜ் சோப்ரா அம்மாவின் சாட்டையடி பதில்


Senthil Balaji Case: பிணை கோரி செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்..