தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் என கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'வாரிசு'. அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாக உள்ளது தளபதி 67 திரைப்படம். 


 



இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'. கொரோனா காலத்தில் வெளியானாலும் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தளபதி 67 திரைப்படத்தில் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


 






இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களின் பட்டியலை ஆராய்ந்து பார்க்கையில் நடிகர் விஜய்யுடன் இணைத்த இயக்குனர்களில்  பலரும் இரண்டாவது முறையாகவும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் அறிமுகமான விஜய் அதனை தொடர்ந்து அவரின் இயக்கத்தில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மசாலா படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 'பூவே உனக்காக' அதனை தொடர்ந்து ஏராளமான காதல் சப்ஜெக்ட் திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.  


கம்பேக் கூட்டணி:


இப்படி நடிகர் விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்த இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஏ.வெங்கடேஷ் (பகவதி, நிலவே வா), ஃபாசில் (கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை), வின்சென்ட் செல்வா( பிரியமுடன், யூத்), கே. செல்வபாரதி (ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய்), பேரரசு ( திருப்பாச்சி, சிவகாசி), ரமணா (திருமலை, ஆதி) , பிரபு தேவா(போக்கிரி, வில்லு), தரணி (கில்லி, குருவி), ஏ. ஆர். முருகதாஸ் (கத்தி, துப்பாக்கி), சித்திக் (காவலன், பிரெண்ட்ஸ்), பரதன்(பைரவா, அழகிய தமிழ் மகன்), அட்லீ (தெறி, மெர்சல், பிகில்). 



இவர்களின் பட்டியலில் அடுத்ததாக இடம் பெற்றுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவதாக தளபதி 67 திரைப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த செகண்ட் இன்னிங்ஸ் என்றுமே சிறப்பாக ஒர்க் அவுட்டாகி உள்ளது. ஒரு கம்ப்ளீட் என்டர்டெய்னரான இளைய தளபதி நடிப்பில் வெளியான படங்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் எகிற வைக்கும்.