தாதா சாகெப் பால்கே விருது : 


தாதாசாகெப் பால்கே விருது, இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்தவர்களுக்கு கடந்த 1969ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இந்திய அளவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரியவிருது இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. 


தமிழ்த்திரையுலகில் தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் கே. பாலசந்தர் ஆகிய மூவர் மட்டுமே இதுவரை தாதா சாகெப் பால்கே விருது விருதுபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.     


இதுவரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெற்ற விருதுகள் ஒரு பார்வை :


1984 : கலைமாமணி (தமிழக அரசு)
1989 மற்றும் 2011 : எம்.ஜி.ஆர் விருது (தமிழக அரசு)
2000 : பத்மபூஷன் (இந்திய அரசு)
2007 : ராஜ்கபூர் விருது (மகாராஷ்டிரா அரசு)
2014 : இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது (சர்வதேச திரைப்பட திருவிழா) 
2016 : பத்மவிபூஷன் (இந்திய அரசு)
2016 : என்.டி.ஆர் தேசிய விருது (நந்தி விருதுகள்)
2019 : ஐகான் கோல்டன் ஜூப்லி (சர்வதேச திரைப்பட திருவிழா)


சினிமா எக்ஸ்பிரஸ் விருது :
 
1984 - நல்லவனுக்கு நல்லவன் படத்திற்காக..
1985 - ஸ்ரீ ராகவேந்திரா
1988 - பிளட் ஸ்டோன் 
1991 - தளபதி 
1992 - அண்ணாமலை
1993 - வள்ளி
1995 - பாட்ஷா மற்றும் முத்து 


சினிமா விசிறிகள் சங்க விருது :


1979 - ஆறிலிருந்து அறுபது வரை 
1982 - எங்கேயோ கேட்ட குரல்
1984 - நல்லவனுக்கு நல்லவன் 
1985 - ஸ்ரீ ராகவேந்திரா 
1991 - தளபதி
1992 - அண்ணாமலை
1993 - வள்ளி 
1995 - பாட்ஷா மற்றும் முத்து 




ஃபிலிம்ஃபேர் விருது 


1984 - நல்லவனுக்கு நல்லவன்


தமிழ்நாடு மாநில விருது 


1978 - முள்ளும் மலரும் 
1982 - மூன்று முகம் 
1995 - முத்து
1999 - படையப்பா 
2005 - சந்திரமுகி 
2007 - சிவாஜி


மேலும் தனியார் செய்தி நிறுவனங்கள் வழங்கிய பல விருதுகளையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.