எம்மி விருதுகள் 2023


திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆஸ்கர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கையில் ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான வழங்கப்படும் மிக உயரிய விருதாக எம்மி விருதுகள் உள்ளது.


தொலைக்காட்சி தொடர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இந்த எம்மி விருதுகள் வழங்கும் விழா இன்று (நவம்பர் 21) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஆச்சரியப்படும் வகையில் இந்த ஆண்டு இந்திய பிரபலங்களும் விருதுகளை வென்றுள்ளார்கள்.


விர் தாஸ்






பிரபல இந்திய ஸ்டாண்ட் அப் காமெடியனாக விர் தாஸ் இந்த ஆண்டு விருதை வென்றுள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் 'Vir Das: Landing' தொடருக்காக  சிறந்த தனித்துவமான நகைச்சுவை தொடருக்கான பிரிவில் விருதை வென்றது. இதற்கான விருதை அப்படத்தின் நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான விர் தாஸ் பெற்றுக் கொண்டார். அவர் இந்த எம்மி விருதை  'Derry Girls - Season 3' படக்குழுவினருடன் பகிர்ந்து கொண்டார்.


எக்தா கபூர்


பிரபல தயாரிப்பாளரான எக்தா கபூருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது. இவர்களைத் தவிர்த்து  நடிகர்கள் ஷெஃபாலி ஷா மற்றும் ஜிம் சார்ப் உள்ளிட்டவர்களும் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தார்கள்.


பிற பிரிவுகளின் கீழ் விருது வென்றவர்கள்


விளையாட்டைப் பற்றிய சிறந்த ஆவணப்படம் - ஹார்லி மற்றும் கத்யா



சிறந்த நடிகைக்கான சர்வதேச எம்மி: லா காடாவிற்காக - கார்லா சோசா [டைவ்]

சிறந்த பொழுதுபோக்குக்கான சர்வதேச எம்மி: எ போன்டே - தி பிரிட்ஜ் பிரேசில்

குறுந்தொடருக்கான சர்வதேச எம்மி: டெஸ் ஜென்ஸ் பியென் ஆர்டினேயர்ஸ் [அன் ஆர்டினரி வர்ல்ட்]

குழந்தைகளுக்கான சர்வதேச எம்மி: அனிமேஷன்: தி ஸ்மெட்ஸ் மற்றும் தி ஸ்மூஸ்

குழந்தைகளுக்கான சர்வதேச எம்மி: தகவல் & பொழுதுபோக்கு: பில்ட் டூ சர்வைவ்

குழந்தைகளுக்கான சர்வதேச எம்மி: லைவ்-ஆக்சன்: ஹார்ட் பிரேக் ஹை

டிவி திரைப்படம்/மினி-தொடருக்கான சர்வதேச எம்மி: லா காடா [டைவ்]

நகைச்சுவைக்கான சர்வதேச எம்மி: வீர் தாஸ் : லேண்டிங் மற்றும் டெர்ரி கேர்ள்ஸ் - சீசன் 3

சிறந்த நடிகருக்கான சர்வதேச எம்மி: தி ரெஸ்பாண்டர் தொடருக்காக மார்ட்டின் ஃப்ரீமேன்

டெலினோவெலா பிரிவில் சர்வதேச எம்மி: யார்கி [ஃபேமிலொ சீக்ரெட்ஸ்]