சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , DNA ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கவனமீர்த்தவர் நடிகை நிமிஷா சஜயன். இவர் மலையாளத்தில் நடித்து பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்
தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்
திலீஷ் போத்தன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' ஃபகத் ஃபாசில் , சுராஜ் வெஞ்சரமூடு , நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் கல்யாணமாகி தாலி செயினை திருடனிடம் பறிகொடுத்துட்டு, அதை மீட்க போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நிமிஷா. ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்படம் காணக் கிடைக்கிறது
ஒரு குப்ரசித்தா பையன்
2018 ஆம் வெளியான படம். வழக்கறிஞராக இப்படத்தில் நிமிஷா நடித்திருப்பார். கதாபாத்திரத்தின் பயம், பதற்றம், அதே நேரத்தில் உறுதியான மனதை மிக இயல்பாக தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்திற்காக கேரள மாநில அரசின் விருதும் வென்றார். ஆஹா ஓடிடி தளத்தில் இப்படம் காண கிடைக்கிறது
சோழா
ஜானகி ஒரு பதினாறு வயது பள்ளி மாணவியாக நிமிஷா இப்படத்தில் நடித்திருப்பார். ஒளிவுதிவசத்தே களி , எஸ் துர்கா போன்ற படங்களை இயக்கி சர்வதேச அளவில் கவனமீர்த்த சனல்குமார் சசிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி பரவலான விவாதத்தை உருவாக்கியது இப்படம். அமேசான் பிரைமில் இப்படத்தை பார்க்கலாம்
தி கிரேட் இந்தியன் கிச்சன்
2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்தி மற்றும் தமிழிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. புதிதாக திருமணமாகி தனது தனது கணவன் வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் தனது கனவுகளை எல்லாம் தியாகம் செய்து அந்த குடும்பத்திற்கு சமைத்து போடும் ஒருவராக மட்டுமே நடத்தப்படுகிறார். சமையலறையில் அடைந்து , வீட்டு வேலையும், கணவனுடைய ஆணாதிக்க எதிர்பார்ப்புகளையும் பொறுமையாக எதிர்கொள்கிறார். இவற்றில் இருந்து கடைசியில் அவர் வெளிவருவதே படத்தின் கதை. எதார்த்தமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் நிமிஷாவின் நடிப்பு படத்தை பார்வையாளர்கள் படத்துடன் ஒன்ற ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அமேசான் பிரைமில் இந்த படத்தை பார்க்கலாம்
நயட்டு
படத்தில் நிமிஷா சஜயன் WCPO Sunitha கதாபாத்திரமாக நடித்துள்ளார் சுனிதா ஒரு இளம் பொலீஸ் கான்ஸ்டபிள், கேரளாவில புது வேலைக்கு சேர்ந்தவர். நேர்மையானவர், ஆனால் அனுபவம் கம்மியானவர். ஒரு தற்செயலான விபத்தில் அவருடைய சக பொலீஸ்காரர்களுடன் ஒரு கொலை வழக்கில் மாட்டிக்கொள்கிறார். அதில் பொலீஸ் ஊழல், அரசியல் அழுத்தம், ஜாதி பாகுபாடு போன்ற பலதை எதிர்கொள்கிறார் . நெட்ஃப்ளிக்ஸில் இப்படத்தைப் பார்க்கலாம்
மாலிக்
ரோஸ்லின் என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நிமிஷா சஜயன் நடித்துள்ளார். கடற்கரை கிராமத்தில் வாழும், அவர் தனது கணவனின் சமூக நீதி போராட்டத்துக்கு ஆதரவா இருக்கார். ஆனால், குடும்ப பிரச்சனைகள், மத மோதல்கள், அரசியல் அழுத்தங்கள் அவர் வாழ்க்கைய பாதிக்கின்றன. அமேசான் பிரைமில் இப்படத்தைப் பார்க்கலாம்