திரையுலகத்தின் அங்கமாக இருப்பதை பெருமையாக உணர்பவர்கள் பலரை இந்த சினிமா கண்டுள்ளது. ஆனால் சினிமாவுக்கே பெருமை சேர்த்த வெகு சில நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயராம். மலையாள திரையுலமே கொண்டாடும் பத்மஸ்ரீ ஜெயராம் இன்று தனது 58வது பிறந்தநாளை(Jayaram Birthday) கொண்டாடுகிறார். 


 


பன்முக கலைஞர்:


ஒரு மிமிக்ரி கலைஞனாக திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்த ஜெயராமுக்கு, நடிக்கும் வாய்ப்பு 88ம் ஆண்டு வெளியான 'அபரன்' படம் மூலம் கிடைத்தது.  முதல் படத்திலேயே ஹீரோ, வில்லன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். தமிழில் 'கோகுலம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை கேரக்டர், சீரியஸ் கேரக்டர் என எது கொடுத்தாலும் சிக்ஸர் அடிக்கும் ஜெயராம் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பேவரட்.  


ஒரு நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், பாடகர் என பன்முகம் கொண்டவராக திகழும் ஜெயராம் ஒரு மிக சிறந்த செண்ட தாள வாத்தியக்காரராகவும் அறியப்படுகிறார். தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடிகர் ஜெயராமின் பங்களிப்பு அபாரம். அப்படி அவர் நடிப்பில் வெளியான சில சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களின் வரிசையை காணலாம். 


தெனாலி - டாக்டர் கைலாஷ் 


கமல்ஹாசன் - ஜெயராம் காம்போவில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தெனாலி. மோகன்லால் நடிக்க இருந்த அந்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு மனநல மருத்துவராக ஜெயராம் நடிக்க அவரின் பேஷண்ட்டாக கமல்ஹாசன் நடித்திருந்தார். அவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகள் அனைத்துமே பட்டையை கிளப்பியது.


 



பஞ்சதந்திரம்  - நாயர் 


கமல்ஹாசன் - ஜெயராம் காம்போவில் வெளியான அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம். ஐந்து நண்பர்களும், அவர்கள் செய்யும் லூட்டிகளும், சேட்டைகளும் படம் முழுக்க கலகலப்பாக வைத்திருந்தது. டைம்லி காமெடியால் ரசிகர்களை இன்று வரை ரிப்பீட் மோடில் வைத்து என்டர்டெயின் செய்யக்கூடிய கிளாசிக் திரைப்படம் பஞ்சதந்திரம். 


பொன்னியின் செல்வன் - ஆழ்வார்க்கடியான் நம்பி 


பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் நடிகர் ஜெயராம். வரலாற்று புனைவு நாவல் என்பதால் படத்தின் கதாபாத்திரத்திற்காக உடல் எடை அதிகரித்து ஹேர்ஸ்டைலை மொத்தமாகவே மாற்றி மாறுபட்ட ஒரு தோற்றத்தில் அசத்தி இருந்தார்.


 



துப்பாக்கி - ரவிச்சந்திரன் 


நடிகர் விஜய் - ஜெயராம் காம்போவில் வெளியான துப்பாக்கி படத்தில் ராணுவ உயர் அதிகாரி கதாபாத்திரம் என்றாலும் அதையும் மிகவும் நகைச்சுவை கலந்து சிறந்த ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 


உத்தமவில்லன் - ஜேகப் சக்காரியா 


கமல்ஹாசன் - ஜெயராம் காம்போவில் வெளியான மற்றுமொரு திரைப்படம் 'உத்தமவில்லன்'. முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இது இவர்கள் கூட்டணி சேரும் ஐந்தாவது திரைப்படமாகும்.