நாள் - 10.12.2023 - ஞாயிற்று கிழமை
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்குத் திருப்தியை ஏற்படுத்தும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மதிப்பு மேம்படும் நாள்.
ரிஷபம்
நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான வழக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். நெருக்கடியான சூழல் படிப்படியாகக் குறையும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.
மிதுனம்
வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு ஏற்படும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கடகம்
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் சிலருக்குச் சாதகமாக அமையும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். கால்நடை சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்குக் கல்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திடீர் பயணங்கள் ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.
சிம்மம்
தகவல் தொடர்பு துறையில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். எதையும் செய்து முடிக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
கன்னி
தடைபட்ட வரவுகள் கிடைக்கும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தமான சூழ்நிலைகள் விலகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
துலாம்
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். சகோதரர் வகையில் ஒற்றுமையும், புரிதலும் உண்டாகும். தடைகள் விலகும் நாள்.
விருச்சிகம்:
வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்பட்டு மறையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துகளால் விரயம் ஏற்படும். மறதி குறையும் நாள்.
தனுசு
வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சுபகாரிய பயணங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
மகரம்
வாகனம் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பக்தி நிறைந்த நாள்.
கும்பம்
சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சலனம் நிறைந்த நாள்.
மீனம்
இனம்புரியாத கற்பனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். தேவையில்லாத செலவுகளைக் குறைப்பதன் மூலம் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பொன் நகைகளில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.