ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லிங்குசாமி . முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்த நிலையில் , ஆனந்தம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கும் மம்முட்டிக்கும் நடந்த  குட்டி குட்டி மோதல்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் லிங்குசாமி அது குறித்து பார்க்கலாம்.
” ஆனந்தம் படம் கிடைத்தவுடன் அந்த படத்தை எப்படி எடுக்க போகிறோம் என விடிய விடிய தூங்கவில்லை. மம்முட்டி சார்க்கிட்ட இருந்து டேரக்‌ஷன் கத்துக்கிட்டேனுதான் சொல்லனும் . நான் ரொம்ப பதட்டதுல இருந்தேன் . அதை முதல் நாள் வாட்ச் பண்ணாரு மம்முட்டி சார். முதல் நாள் ஷார்ட்ல குழந்தை எங்க ஐயா பேரை வைப்பீங்களா என கேட்கும் .அதன் பிறகு கேமராவை அங்கிருந்து  மம்முட்டி சாருக்கு எடுத்துட்டு போக சொன்னேன். அதுல மம்முட்டி சார் கரெக்‌ஷன் சொன்னாரு. நான் ஓக்கே சார்னு சொல்லிட்டேன் இருந்தாலும் , முதல் நாளே அவர் சொல்லுறத கேட்டுட்டா , நம்ம டேரக்‌ஷன்க்குள்ள வருவாரானு சந்தேகம் இருந்துச்சு . அடுத்த நாள் என்னை கூப்பிட்டு , தம்பி இங்க வா.. என்ன ஷார்ட் இன்னைக்கு அப்படினு கேட்டாரு .சொன்னேன்.. என்னுடையை உதவி இயக்குநர்கள் , கேமரா மேன் வில்சன் இவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை வெளியே போகச்சொன்னார். சீன் எடுக்குறதுக்கு முன்னால ஒரு முறை நடிச்சு பாரு , அப்போதான் காட்சி எப்படி வச்சா நல்லா இருக்கும்னு உனக்கு புரியும்னு சொன்னாரு. படம் நல்ல கதை , நல்லா வரும். அது நல்லா வரனும்தான் இங்க தம்பியா நடிக்குற பசங்களோட ஷர்ட்டிள் விளையாடுறேன் , பைக்ல சுத்துறேன் என்றார். 




சரி சார் என்றேன்.. அதன் பிறகு நடிச்சு பார்த்துதான் எல்லா ஷார்ட்டும் எடுத்தேன்.  அந்த காலக்கட்டத்துல நான் எதை பற்றியும் யோசிக்க மாட்டேன் . அப்போதான் எனக்கும் அவருக்கும் ஒரு கிளாஷ் ஆச்சு . பாஸ்புக் எடுத்து கணக்கு கேட்பது போல ஒரு சீனு, அப்போதான் தாங்க மாட்டீங்கடா இது என்னனு தெரிஞ்சா தாங்க மாட்டீங்கன்னு டயலாக் , அது எடுக்கும் போது எனக்கு திருப்தி இல்லை. 8 டேக் போச்சு .. மம்முட்டி டென்ஷன் ஆயிட்டாரு . என்ன தம்பி வேணும் உனக்குனு கேட்டார். சார் அந்த இடத்துல ஒரு கரெக்‌ஷன் சொன்னேன். அதல்லாம் டப்பிங்ல போடனும்னு சொன்னாரு. நான் எடுக்கும் போதே ஒரு ஃபீல் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். உடனே நீ பண்ணிக்காட்டுனு சொன்னாரு. பண்ணிக்காட்டுனேன் அதே போல செஞ்சு காட்டிட்டு ஓக்கேவானு கேட்டாரு. அதன் பிறகு டப்பிங்ல முட்டிக்கிச்சு.. எனக்கு தஞ்சாவூர் தமிழ் வரனும் , அவர் மலையாளம் கலந்த தமிழ் பேசுவாரு. என்னென்னு தெரிஞ்சா தாங்க மாட்டீங்கடானு சொல்லுற அதே வசனத்தை பேசும் பொழுது எனக்கு திருப்தி இல்லை , மறுபடி மறுபடி சொன்னேன். என்ன வெளியே போக சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் பேசினார் மம்முட்டி . ஃபைனல் மிக்ஸிங்ல எனக்கு அந்த டயலாக் மட்டும் திருப்தி இல்லை. மீண்டும் மம்முட்டியை வர வைத்து பேச சொன்னோம் . அவர் என்னை திட்டிக்கொண்டே செய்தார். நான் அந்த சமயங்கள்ல அழுது இருக்கேன். அவர் பேசின முந்தைய வசனத்தின் பாதியில் இருந்தும் , இப்போதைய டப்பிங்கில் பாதியையும் இணைத்து மிக்ஸ் செய்தோம் . அதன் பிறகு மலையாள நடிகர்கள் எப்படி தமிழ் பேச வேண்டும் என மம்முட்டியை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் , குறிப்பாக நான் ரீ-டேக் செய்த வசனத்தையும் விமர்சனத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள் “ என முதல் படத்தின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் லிங்குசாமி.